வேகமான வளர்ச்சியில் இந்திய பொருளாதாரம்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
நியூயார்க் :உக்ரைன் போர் உலக நாடுகளை பாதித்துள்ள போதிலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளதாக ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா., பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:உலக நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், உக்ரைன் போரால் அந்நாடுகளின் பொருளாதார
வேகமான,வளர்ச்சி ,  இந்திய பொருளாதாரம்

நியூயார்க் :உக்ரைன் போர் உலக நாடுகளை பாதித்துள்ள போதிலும், இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி வேகமாக உள்ளதாக ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ.நா., பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்கள் துறை, உலக பொருளாதாரம் குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்:

உலக நாடுகள் கொரோனா தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நிலையில், உக்ரைன் போரால் அந்நாடுகளின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, நடப்பு சர்வதேச பொருளாதார வளர்ச்சி, மறுமதிப்பீடு செய்யப்பட்டு, 4 சதவீதத்தில் இருந்து, 3 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.


latest tamil news






போர் காரணமாக உலகளவில் பணவீக்கம், கடந்த 10 ஆண்டு சராசரியை விட, இரு மடங்கு உயர்ந்து, 6.7 சதவீதமாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்தாண்டு தெற்காசிய பொருளாதார மதிப்பீடு 0.4 சதவீதம் குறைக்கப்பட்டு, 5.5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இப்பிராந்தியத்தில் இந்திய பொருளாதாரம் 2021ல், 8.8 சதவீதம் வளர்ச்சி கண்டது.

இந்தாண்டில் பணவீக்க உயர்வு மற்றும் தொழில் துறை முழுமையாக மீட்சி அடையாத காரணத்தால், இந்திய பொருளாதார வளர்ச்சி 0.3 சதவீதம் குறைந்து, 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருந்தும், இந்தியா உலகளவில் வேகமான பொருளாதார வளர்ச்சி கண்டு வரும் நாடாக விளங்குகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Siva - Kumbakonam,இந்தியா
20-மே-202218:53:58 IST Report Abuse
Siva அப்படியா
Rate this:
Cancel
Somiah M - chennai,இந்தியா
20-மே-202218:11:15 IST Report Abuse
Somiah M ஒண்ணுமே புரியலே உலகத்திலே ...................................ஐ நா சொல்ற ஒன்னை நம்பாதே என்கிறார்கள் மற்றொன்றை நம்பு என்கிறார்கள் ...................................ஒண்ணுமே புரியலே உலகத்திலே
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-மே-202212:48:22 IST Report Abuse
பாமரன் நல்ல சேதி.. இந்திய பொருளாதாரம் வீழ்ச்சியடைய வாய்ப்பில்லை. சற்றே தடுமாற்றங்கள் இருந்தாலும் அடுத்த ஐம்பதாண்டுகளுக்கு உலகத்துக்கு ஆச்சர்யமூட்டும் வகையில் வளர்ந்துக்கிட்டே தான் இருக்கும்.. இதில் அரசியல்வியாதிகளின் பங்களிப்பைவிட குடைச்சல்கள் அதிகம் இல்லாமல் இருந்திருந்தால் நாமும் எப்போதோ முன்னேறிய நாடாக ஆகியிருப்போம்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X