எல்லையில் பாலம் கட்டும் சீனா: அதிர்ச்சி தகவல்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
புதுடில்லி: எல்லையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே இரண்டாவது பெரிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வரும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.நம் அண்டை நாடான சீனாவின் ராணுவம் 2020ல் கிழக்கு லடாக் எல்லையில் அத்துமீறியதை தொடர்ந்து, அதற்கும், நம் நாட்டுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தன. இதனால் போர் மூளும் அபாயம் உருவானது. ராணுவ உயர்
எல்லை,பாலம் கட்டும் சீனா, அதிர்ச்சி தகவல்

புதுடில்லி: எல்லையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே இரண்டாவது பெரிய பாலத்தை சீன ராணுவம் கட்டி வரும் செயற்கைக்கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது.
நம் அண்டை நாடான சீனாவின் ராணுவம் 2020ல் கிழக்கு லடாக் எல்லையில் அத்துமீறியதை தொடர்ந்து, அதற்கும், நம் நாட்டுக்கும் மோதல் ஏற்பட்டது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தன. இதனால் போர் மூளும் அபாயம் உருவானது.
ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான தொடர் பேச்சுக்குப் பின், இரு தரப்பும் படைகளை திரும்ப பெற்றன. ஆனால், சில முக்கிய இடங்களில் இருந்து, இருதரப்பும் படைகளை இன்னும் விலக்கிக் கொள்ளவில்லை.


latest tamil news





இருநாட்டு ராணுவமும், 50 - 60 ஆயிரம் வீரர்கள் வரை எல்லையில் குவித்துள்ளன. இங்கு ராணுவ கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் இரு நாடுகளுமே ஈடுபட்டுள்ளன. நம் எல்லையில் பாலங்கள், சாலைகள், சுரங்கங்கள் கட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.
அதே போல, சீன பகுதியில் உள்ள பாங்காங் சோ ஏரியின் குறுக்கே அந்நாட்டு ராணுவம், மிகப் பெரிய பாலத்தை கட்டி முடித்தது.
இந்நிலையில், சீன ராணுவம் மேலும் ஒரு பாலத்தை தற்போது கட்டி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புவி உளவு ஆய்வாளர் டாமியன் சைமன் சமீபத்தில் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படத்தில், சீனா கட்டும் புதிய பாலம் தெளிவாக தெரிகிறது.
நம் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து 20 கி.மீ., தொலைவில் கட்டப்படும் இந்த பாலம், இருபுறங்களில் இருந்தும் எழுப்பப்பட்டு வருகிறது.
எல்லையில், மிகப் பெரிய ராணுவ வாகனங்கள், படைகளை விரைவில் குவிக்க இந்த பாலத்தை சீனா கட்டி வருவதாக டாமியன் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
20-மே-202217:58:23 IST Report Abuse
Somiah M தூங்காதே ..................தம்பி ..............தூங்காதே என்கிற பாட்டு சத்தம் கேட் க்கிறதே .. ஏன் ?
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-மே-202214:02:25 IST Report Abuse
Ramesh Sargam இந்திய அரசு விழித்துக்கொள்ளவேண்டும். இதுபோன்ற சீனாவின் செயல்களுக்கு சரியான பதிலடி கொடுக்கவேண்டும். நாமும் எல்லையில் பாலங்கள் கட்டி, சீனாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். வெறும் வாய் சவடால் விட்டால் மட்டும் போதாதது. செயலில் காட்டவேண்டும் நமது வீரத்தை.
Rate this:
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
20-மே-202211:27:09 IST Report Abuse
பாமரன் //..புவி உளவு ஆய்வாளர் டாமியன் சைமன் சமீபத்தில் வெளியிட்டுள்ள செயற்கைக்கோள் புகைப்படத்தில், சீனா கட்டும் புதிய பாலம் தெளிவாக தெரிகிறது...//.. அப்போ நாம உடுற ராக்கெட்லாம் இன்னா பண்ணுதாம்...🤣🤣
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X