கருணாநிதிக்கு சிலை வைக்க அமைச்சருக்கு ஐகோர்ட் தடை

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (11) | |
Advertisement
சென்னை, :திருவண்ணாமலை மாவட்டத்தில், கிரிவலப் பாதை அருகில், மறைந்த அரசியல் கட்சி தலைவர் சிலை வைக்க, அமைச்சர் வேலு மற்றும் அவரது மகனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனு:திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமத்தில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. வேங்கிக்கால் சந்திப்பில்
கருணாநிதிக்கு சிலை வைக்க அமைச்சருக்கு ஐகோர்ட் தடை

சென்னை, :திருவண்ணாமலை மாவட்டத்தில், கிரிவலப் பாதை அருகில், மறைந்த அரசியல் கட்சி தலைவர் சிலை வைக்க, அமைச்சர் வேலு மற்றும் அவரது மகனுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.சென்னை, வேளச்சேரியைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தாக்கல் செய்த மனு:

திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால் கிராமத்தில், ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. வேங்கிக்கால் சந்திப்பில் இந்த நிலம் உள்ளது. மாநில நெடுஞ்சாலையையும், கிரிவலப் பாதையையும் இணைக்கும் வகையில், இந்த சந்திப்பு உள்ளது.
கிரிவலத்தின் போது, லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு வருவர். வாகனப் போக்குவரத்தும் இங்கு அதிகமாக இருக்கும்.


latest tamil news
கடந்த ஜனவரியில், ராஜேந்திரன் நிலம் அருகில் 300 சதுர அடி இடம் ஆக்கிரமிக்கப்பட்டது. மறைந்த கட்சி தலைவருக்கு சிலை வைக்க, மாவட்டச் செயலர் வேலு மற்றும் அவரது மகன் குமரன் நிர்வாக அறங்காவலராக உள்ள கல்வி அறக்கட்டளை, 215 சதுர அடி இடத்தை கையகப்படுத்தி உள்ளனர்.
அந்த இடத்தை சிலை வைக்க ஒதுக்கி உள்ளனர். அருகில், 300 சதுர அடியை ஆக்கிரமித்து துாண்கள் எழுப்பி உள்ளனர்.இந்த சட்டவிரோத கட்டுமானத்தை தடுக்கவில்லை என்றால், அங்கு போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும்.கிரிவலம் வரும் பக்தர்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, சிலை வைக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சத்தியநாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. 'மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு உள்ளதா, இல்லையா என, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
'அதுவரை, தற்போதைய நிலை தொடர வேண்டும்' என, நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.இதையடுத்து, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கலெக்டர் தரப்பில் அவகாசம் கோரி தாக்கல் செய்த மனுவில், 'திருவண்ணாமலை எஸ்.பி., - மாவட்ட வருவாய் அதிகாரி, கோட்ட பொறியாளர், வருவாய் கோட்ட அதிகாரி, தாசில்தார், வட்டார வளர்ச்சி அதிகாரி ஆகியோரிடம் விபரங்களை பெற வேண்டியுள்ளது' என தெரிவிக்கப்பட்டது.


அதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'விபரங்கள் பெற்று, மனுவில் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விரிவான அறிக்கையை, நீதிமன்றத்தில் கலெக்டர் தாக்கல் செய்ய வேண்டும். 'வேங்கிக்கால் கிராமத்தில், குறிப்பிட்ட சர்வே எண்ணில், சிலை அமைக்கவோ, கட்டுமானம் மேற்கொள்ளவோ, வேலு மற்றும் குமரனுக்கு தடை விதிக்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.குறிப்பிடப்படும் இடத்தில், மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி சிலை வைக்க, அமைச்சர் வேலு ஏற்பாடுகளை செய்து வந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
20-மே-202219:12:07 IST Report Abuse
Girija ஏ வ வேலு அரசன் அன்ரே கொள்வான் தெய்வம் நின்று கொல்லும் , இப்படியெல்லாம் செய்வதற்கு பதில் தமிழில் அர்ச்சனை செய்ய கற்றுக்கொண்டு முதலமைச்சர் குடும்பத்திற்கு திரவிட அய்யர் ஆகா இருக்கலாமே?, திரவிட (சோ) மா (தி )ரி யாகவும் இருக்கும் .
Rate this:
Cancel
jayvee - chennai,இந்தியா
20-மே-202210:41:59 IST Report Abuse
jayvee கோவில் கோவிலாய் (கோவில்களை மட்டும் குறிவைத்து) பார்த்து வாசலில் பெரியாருக்கு சிலை எடுத்த தானை தலைவனுக்கு இந்த கதி.. அடுத்தவன் நிலையத்தை ஆட்டைபோட்டு சிலை தேவையா
Rate this:
Cancel
... - ,
20-மே-202210:15:23 IST Report Abuse
... Lollu சபா Manohar சிலை வைக்க உயர்நீதிமன்றம் தடை ன்னு தானே செய்தி இருக்கனும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X