கோவை: பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மற்றும் நீண்ட நாள் விடுமுறையில் உள்ள மாணவர்களை கண்டறியும் கள ஆய்வு, கோவையில் இன்று முதல் துவங்கவுள்ளது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில், ஆண்டுதோறும் ஏப்., மே மாதங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படும். இந்த ஆய்வில் கண்டறியப்படும் மாணவர்கள், 'ரெகுலர்' பள்ளியில் சேர்க்கப்படுவார்கள். நடப்பாண்டில் இப்பணிகள் தற்போது துவக்கப்பட்டுள்ளன.
பள்ளி வாரியாக, வட்டார வாரியாக பள்ளி செல்லா குழந்தைகள் கண்டறிய, குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர், ஆசிரியர், தன்னார்வலர்கள், வட்டார கல்வி அதிகாரிகள், ஆசிரியர் பயிற்றுனர்கள் இணைக்கப்பட்டு உள்ளனர்.

ஒருங்கிணைந்த கல்வித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஒருவர் கூறுகையில், 'பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பிற்கு குழு அமைக்கப்பட்டுள்ளது. களஆய்வில் ஈடுபடவுள்ளனர்.
5, 8, 10ம் வகுப்புகளை முடிப்பவர்கள் கல்வியை தொடர்வது உறுதி செய்வது, அங்கன்வாடியில் பள்ளி வயது வந்த குழந்தைகள் அனைவரும், பள்ளியில் சேர்ந்து இருப்பதை உறுதி செய்தல், நீண்ட இடைவெளியில் உள்ளவர்களின் பட்டியலின் படி 3,250 மாணவர்களை கண்டறிந்து பள்ளியில் சேர்த்தல் ஆகியவற்றை, முக்கிய நோக்கமாக கொண்டு ஆய்வு மேற்கொள்ளப் படும். ஆய்வு முடிவுகளின் படி, அடுத்தகட்ட செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE