ஹேமந்த் சோரன் மீதான கல்குவாரி வழக்கு: இன்று விசாரணை| Dinamalar

ஹேமந்த் சோரன் மீதான கல்குவாரி வழக்கு: இன்று விசாரணை

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (4) | |
புதுடில்லி: :கல்குவாரி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் மீது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு இன்று (மே.20) விசாரணைக்குவருகிறது. ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தன் பதவியை பயன்படுத்தி, கல்குவாரி குத்தகை ஒப்பந்தத்தை சொந்த பெயரில் எடுத்து பலன் அடைந்துள்ளதாக, அவர் மீது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு
 Supreme Court To Hear Plea On Probe Against Jharkhand Chief Minister

புதுடில்லி: :கல்குவாரி ஒப்பந்த முறைகேடு தொடர்பாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த்சோரன் மீது உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கு இன்று (மே.20) விசாரணைக்குவருகிறது.


ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தன் பதவியை பயன்படுத்தி, கல்குவாரி குத்தகை ஒப்பந்தத்தை சொந்த பெயரில் எடுத்து பலன் அடைந்துள்ளதாக, அவர் மீது, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.


latest tamil news


இந்த விவகாரம் தொடர்பாக பதில் அளிக்குமாறு, ஹேமந்த் சோரனுக்கு நீதிமன்றம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. இதையடுத்து, பா.ஜ., மாநில கவர்னரிடம் புகார் அளித்தது. இதை கவர்னர் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைத்தார். இது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு, ஜார்க்கண்ட் அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.



இந்நிலையில், இந்த முறை கேடு குறித்து சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை விசாரணை நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி என்.வி., ரமணா, உள்ளிட்ட நீதிபதிகள் இன்று விசாரணைக்கு எடுத்து கொள்கின்றனர்.
.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X