'டூ - வீலர்'களுக்கு தனி வழி திட்டம்: பைபாஸ் சாலையில் தாமதம்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (7) | |
Advertisement
சென்னை: சென்னை பைபாஸ் சாலையில், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.பெருங்களத்துார் - புழல் இடையிலான சென்னை பைபாஸ் சாலை, 32 கி.மீ., நீளம் உடையது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், இச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள்

சென்னை: சென்னை பைபாஸ் சாலையில், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம், கிடப்பில் போடப்பட்டு உள்ளது.latest tamil news
பெருங்களத்துார் - புழல் இடையிலான சென்னை பைபாஸ் சாலை, 32 கி.மீ., நீளம் உடையது. சென்னை - திருச்சி, சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில், இச்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் போக்குவரத்திற்காக, தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இது உருவாக்கப்பட்டது. ஆனால், தற்போது அரசு மற்றும் ஆம்னி பேருந்துகள், கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மட்டுமின்றி, இருசக்கர வாகனங்களும், இச்சாலையில் அதிகளவில் செல்கின்றன.

குறிப்பாக, பெருங்களத்துார் முதல், நொளம்பூர் மேம்பால சர்வீஸ் சாலை வரை, 24 மணி நேரமும் இருசக்கர வாகனங்களின் போக்குவரத்து உள்ளது. இச்சாலையில், மின்விளக்குகளும் இதுவரை அமைக்கப்படவில்லை. இச்சாலையில் அடிக்கடி இருசக்கர வாகன விபத்து மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.


latest tamil news
இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்த தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின், தமிழக பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டனர். இதற்காக, திட்ட மதிப்பீட்டை தயாரித்து, டில்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணைய தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்தனர். இரண்டு ஆண்டுகள் ஆகியும், இத்திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
இதனால், இருசக்கர வாகனங்களுக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம் கிடப்பில் வைக்கப்பட்டு உள்ளது.சென்னை பைபாஸ் சாலையில் ஏற்படும் விபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில், இத்திட்டத்தை செயல்படுத்த விரைந்து நிதி ஒதுக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TAMILAN - new jerssy,யூ.எஸ்.ஏ
20-மே-202216:07:48 IST Report Abuse
TAMILAN சாலைகள் போடுவதற்கு திட்டம் தீட்டும் அமைச்சர்கள் மற்றும் ஆளும் காட்சிகள் பணத்தை தன குடுமபத்திற்க்காக எடுத்து சென்று விட்டார்கள். தமிழகத்தின் கடன் 5 ஐந்து லட்சம் கோடி அனைத்தும் தமிழக எம்.எல். ஏ க்களிடமும் மற்றும் எம்.பி க்களிடமும் உள்ளது. . மக்கள் விழிப்புணர்வுடன் செயல் பட்டு அந்த சொத்துக்களை தங்கள் வயப்படுத்த வேண்டும். இலங்கை மக்களை போல் அணைத்து எம். எல். ஏ மற்றும் எம்.பி க்களின் வீடுகளை முற்றுகை இட்டு போராட வேண்டும். இல்லை என்றல் நமது நிலைமையும் இலங்கை மக்களை போலத்தான்.
Rate this:
Cancel
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
20-மே-202215:37:08 IST Report Abuse
NicoleThomson முதலில் சாலை விதிகளை அவர்களுக்கு சொல்லி கொடுங்க அய்யா . முடிந்தால் உங்களின் கார்பொரேட் ஊடகங்களில் புகை நமக்கு பகை போல இரு சக்கர வாகனம் சாலைவிதிகளை பற்றி சொல்லி கொடுங்க
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-மே-202212:45:32 IST Report Abuse
Ramesh Sargam இனி வரும் காலங்களில், நாட்டில் எந்தமூலையில் புதுசாக சாலை போடப்பட்டாலும் தனியாக இரு சக்கர வாகனங்களுக்கு இடம் ஒதுக்கி, சாலை போடவேண்டும். கவனிக்குமா நெடுஞ்சாலை துறை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X