ஊட்டியில் மலர் கண்காட்சி: முதல்வர் ஸ்டாலின் துவக்கிவைப்பு

Added : மே 20, 2022 | |
Advertisement
ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 124வது மலர் கண்காட்சி இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 20) துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, திமுக எம்.பி., ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.தாவரவியல் பூங்காவில், இன்கா மேரிகோல்டு, பெட்டூனியா உள்ளிட்ட பல்வேறு வகைகளை கொண்ட, 5.5 லட்சம்
ஊட்டி, மலர் கண்காட்சி, முதல்வர், ஸ்டாலின், துவக்கம்

ஊட்டி : நீலகிரி மாவட்டம், ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில், 124வது மலர் கண்காட்சி இன்று துவங்கி, 24ம் தேதி வரை நடக்கிறது. மலர் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் இன்று (மே 20) துவக்கி வைத்தார். துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்கா, திமுக எம்.பி., ஆ.ராசா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தாவரவியல் பூங்காவில், இன்கா மேரிகோல்டு, பெட்டூனியா உள்ளிட்ட பல்வேறு வகைகளை கொண்ட, 5.5 லட்சம் மலர்கள் பூத்து குலுங்குகின்றன. 40 ஆயிரம் தொட்டிகள், மலர் காட்சி மாடத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. பல வண்ணங்களை கொண்ட ஒரு லட்சம் கார்னேஷன் மலர்களை கொண்டு, கோவை வேளாண் பல்கலைக்கழகம் கட்டடத்தின் மாதிரி முகப்பு தோற்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக, பெங்களூர், ஓசூர் போன்ற பகுதிகளிலிருந்து கார்னேஷன் மலர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X