12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | |
Advertisement
வெள்ளி முதல் வியாழன் வரை (20.5.2022 - 26.5.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.மேஷம் சுக்கிரன், சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து செயல்பட மேன்மை அதிகரிக்கும்.அசுவினி: தொழிலில் இருந்த தடைகள் விலகும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின்
வாரராசி, ராசிபலன், வாரபலன், பரிகாரம், மேஷம், ரிஷிபம் மிதுனம், கடகம், சிம்மம், துலாம் கன்னி, விருச்சிகம், தனுசு,மகரம், கும்பம், மீனம்

வெள்ளி முதல் வியாழன் வரை (20.5.2022 - 26.5.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு என்ன பலன். உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரமும் காணுங்கள்.


மேஷம்


சுக்கிரன், சனி, சந்திரன் நன்மைகளை வழங்குவார்கள். திருச்செந்தூர் முருகனை மனதில் நினைத்து செயல்பட மேன்மை அதிகரிக்கும்.

அசுவினி: தொழிலில் இருந்த தடைகள் விலகும், உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் பாராட்டிற்கு ஆளாவீர்கள். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் அதற்கேற்ற வருமானம் வரும். நட்புகளிடம் சிக்கல்கள் உண்டாகலாம்.

பரணி: எதிர்பாலினரால் நீங்கள் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடத்துவதற்குரிய காலம் கூடிவரும். தடைபட்டிருந்த வருவாய் உங்களை வந்தடையும். கணவன் மனைவிக்கும் சில பிரச்சனைகள் வந்து போகும்.

கார்த்திகை1ம் பாதம்: கடந்த வாரத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். பண வரவிற்காக மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழியே தேவையற்ற சங்கடங்கள் உண்டாகலாம்.


ரிஷபம்


செவ்வாய், சுக்கிரன், குரு, கேது யோகத்தை உண்டாக்குவார்கள். சந்திரனை நினைத்து செயல்பட நினைத்தவை நடந்தேறும்.


latest tamil news




கார்த்திகை 2, 3, 4: நீங்கள் ஈடுபடும் முயற்சிகள் வெற்றியாகும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டிக்கொண்டிருந்த பிரச்னைகள் விலகி மனக்குழப்பம் தீரும். மூத்தவர்களின் ஆலோசனைகள் நன்மையளிக்கும். குடும்பத்தில் மங்கல ஓசை கேட்கும்.

ரோகிணி: இன்று மதியம் வரையில் மந்தமான நிலை இருக்கும் என்றாலும் அதன்பிறகு உங்கள் செயல்கள் வேகமாகும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகும். சுறுசுறுப்பாக செயல்பட்டு நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். எதிரிகளின் தொல்லைகள் அகலும்.

மிருகசீரிடம் 1, 2: தொழிலை விரிவு செய்வீர்கள். புதிய முயற்சிகள் பலனளிக்கும். விலகிச் சென்றவர்கள் தேடி வருவார்கள். லாபம் பல வழிகளிலும் வர ஆரம்பிக்கும். குடும்பத்திற்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியாகும்

சந்திராஷ்டமம்: 20.5.2022 காலை 6:00 மணி - மதியம் 1.24 மணி


மிதுனம்


செவ்வாய், ராகு, நன்மைகளை வழங்குவார்கள். வேங்கடவனை மனதில் எண்ணி செயல்பட நன்மைகள் கூடும்.

மிருகசீரிடம் 3, 4: ஞாயிற்றுக்கிழமை மாலை வரையில் உங்கள் செயல்களில் இழுபறியும் குழப்பங்களும் இருக்கும். அதன்பின் நெருக்கடிகள் விலகும். தடைபட்டிருந்த வருவாய் வரத்தொடங்கும். தொழில், உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தது நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

திருவாதிரை: பிள்ளைகள் விஷயத்தில் கூடுதல் கவனம் தேவைப்படும். உங்கள் முயற்சிகள் இழுபறிக்குப்பின் நிறைவேறும். சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் நீண்டுகொண்டே செல்லும். அரசு வகையிலான எதிர்பார்ப்புகளில் நன்மை தோன்றும்.

புனர்பூசம் 1, 2, 3: அரசு வழியில் நெருக்கடிகள் தோன்றும் என்றாலும் உங்கள் முயற்சியால் அதை சரி செய்வீர்கள். தொழிலில் இருந்த சங்கடங்களை உங்கள் முயற்சிகளால் சரி செய்வீர்கள். எதிர்ப்பாளர்களின் செயல்களை முறியடிப்பீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம்: 20.5.2022 மதியம் 1.25 மணி - 22.5.2022 மாலை 4.21 மணி


கடகம்


சுக்கிரன், குரு, சூரியன் நன்மைகளை வழங்குவார்கள். கேது பகவானுக்கு ப்ரீத்தி செய்ய ஆரோக்கியம் சீராகும்.

புனர்பூசம் 4: எந்தவகையில் நெருக்கடிகள் வந்தாலும் அவற்றையெல்லாம் சமாளிப்பீர்கள். புதிய முயற்சிகளில் ஆதாயம் காண்பீர்கள். வாரத்தின் முற்பகுதியில் அலைச்சல் அதிகரிக்கும் என்றாலும் உங்களுடைய முயற்சியால் நீங்கள் விரும்பியதை நிறைவேற்றி மகிழ்வீர்கள்.

பூசம்: அரசு வழியில் எதிர்பார்த்த நன்மைகளை அடைவீர்கள். குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் குழப்பங்கள் விலகும். திங்கள் கிழமை முதல் உங்கள் முயற்சி விறு விறுப்பாகும். உங்கள் திறமை பளிச்சிடும். மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள்.

ஆயில்யம்: தடைபட்டிருந்த வருவாய் இப்போது உங்கள் கைக்கு வரும். பிள்ளைகளின் கல்வி, திருமண முயற்சிகள் வெற்றியளிக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். அந்நிய நபர்களின் ஆதரவுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம்: 22.5.2022 மாலை 4.22 மணி - 24.5.2022 இரவு 8.44 மணி


சிம்மம்


சனி, சுக்கிரன், சூரியன், கேது நற்பலன்களை வழங்குவார்கள். சூரிய பகவானை வழிபட்டுவர சங்கடங்கள் விலகும்.


latest tamil news




மகம்: உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். எதிரிகளால் இருந்த சங்கடங்கள் விலகும். இதுவரையில் இருந்த ஆரோக்கிய நிலையில் மாறுதல் உண்டாகும். உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியதாக இருக்கும். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

பூரம்: எதிர்பார்த்தவற்றில் ஆதாயம் உண்டாகும். மனம் நினைப்பதை செய்ய முடியாத நிலை உண்டாகும்.குடும்பத்திற்காக செலவுகளை சந்திப்பீர்கள். உறவினர்கள் உங்கள் செயல்களுக்கு உதவியாக இருப்பார்கள். வழக்கமான செயல்களிலும் முயற்சிகள் தேவைப்படும்.

உத்திரம் 1: வாரத்தின் பிற்பகுதியில் எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் என்றாலும் உங்களின் புத்திசாலித்தனத்தால் அவற்றை சமாளித்து விடுவீர்கள். உங்கள் தைரியம் அதிகரிக்கும். அரசு வழியிலும் உங்களுக்கு ஆதரவு உண்டாகும். வருவாயில் இருந்த தடைகள் விலகும்.

சந்திராஷ்டமம்: 24.5.2022 இரவு 8.45 மணி - 26.5.2022 நாள் முழுவதும்


கன்னி


குரு, சுக்கிரன், யோகமான பலன்களை வழங்குவார்கள். திருவிக்ரமனை மனதில் நினைத்து செயல்பட நன்மைகள் உண்டாகும்.

உத்திரம் 2, 3, 4: குடும்பத்தில் ஏதேனும் குழப்பங்கள் உண்டாகும். திருமணம், வீடு மனை வாங்கும் முயற்சிகளில் நன்மை உண்டாகும். உங்கள் வாக்கில் நிதானம் தேவைப்படும். பொருள் வரவு தாராளமாகும் என்பதால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள்.

அஸ்தம்: அச்ச உணர்வு மேலோங்கும். தேவையற்ற பயம் வந்து போகும். இரத்த உறவுகள் சுபிட்சமடைவார்கள். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் விலகும். தொழிலில் லாபம் அதிகரிப்பதுடன் புதிய சொத்துகள் வாங்கவும் முயற்சிப்பீர்கள்.

சித்திரை 1, 2: குடும்பத்தில் நிலவிய நெருக்கடிகள் விலகும், பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். மனக்குழப்பங்கள் விலகும், விலகிச்சென்றவர்கள் மீண்டும் விரும்பி வருவார்கள். வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் எண்ணங்கள் நிறைவேறி மகிழ்வீர்கள்.


துலாம்


செவ்வாய் நன்மைகளை வழங்குவார். காளத்தீஸ்வரரை எண்ணி செயல்பட்டுவர சங்கடங்கள் குறையும்.

சித்திரை 3, 4: பல வகையிலும் நெருக்கடிகள் உண்டாகும், மனதில் குழப்பங்கள் அதிகரிக்கும். திட்டமிடும் செயல்களையும் செய்ய முடியாமல் போகும். உறவினர்கள் வகையே சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும் என்றாலும் போராடி எதிர்ப்புகளை வெல்வீர்கள். சட்ட ரீதியாக சில சங்கடங்கள் உண்டாகும் என்பதால் செயலில் நிதானம் தேவை.

சுவாதி: மனதில் ஏதேனும் ஒரு குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். கடுமையாக முயற்சித்தும் சில வேலைகள் நிறைவேறாமல் இழுபறியாகும். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும். புதிய நட்புகளின் வழியே சங்கடங்கள் உண்டாகலாம். எதிர்பாலினரால் பெயர் கெடலாம் என்பதால் எச்சரிக்கை அவசியம்.

விசாகம் 1, 2, 3: வேலைகளில் இழுபறி இருக்கும். முயற்சிகள் செய்தும் எதுவும் நிறைவேறவில்லையே என்ற சங்கடத்தை அடைவீர்கள். அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும் அதிக முயற்சிகள் தேவைப்படும். வாரத்தின் பிற்பகுதியில் உங்கள் முயற்சிகளில் ஓரளவிற்கு நன்மையைக் காண்பீர்கள்.


விருச்சிகம்


சனி, குரு, சுக்கிரன், ராகு யோகத்தை வழங்குவார்கள். நவக்கிரக வழிபாடு நன்மைகளை உண்டாக்கும்.

விசாகம் 4: கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாறுதலை சந்திக்க வேண்டிவரும். தொழிலில் இருந்த நெருக்கடிகள் விலகுவதுடன் எதிர்ப்புகள் அகலும். இதுவரை நிறைவேறாமல் இருந்த உங்கள் ஆசைகள் நிறைவேறும்.

அனுஷம்: திருமண வயதினருக்கு திருமண யோகம் உண்டாகும். பிள்ளைகள் நிலையில் முன்னேற்றம் தோன்றும். வேலைவாய்ப்பு முயற்சிகள் வெற்றியாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும். வருவாயில் இருந்த தடைகள் விலகும்.

கேட்டை: ஒரு சிலர் புதிய வீட்டிற்கு குடிபோவீர்கள். வாலிப வயதினருக்கு திருமணம் கூடும். பெற்றோர்கள் வழியில் உதவிகள் உண்டாகும். எதிர்ப்புகளை விலக்கி நினைத்ததை சாதிப்பீர்கள். புதிய தொழில் தொடங்கும் முயற்சி வெற்றியாகும். வேலை வாய்ப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.


தனுசு


சுக்கிரன், சூரியன், கேது யோகத்தை வழங்குவார்கள். இராமநாதசுவாமியை மனதில் எண்ணி செயல்பட நன்மைகள் உண்டாகும்.

மூலம்: குடும்பத்தினர் வழியே சுப விரயங்கள் உண்டாகும். பூர்வீக சொத்துகள் குறித்த பிரச்சனை இழுபறியாகவே இருக்கும். அந்நிய மனிதர்களின் ஆதரவால் உங்கள் நினைப்புகள் நிறைவேறி மகிழ்வீர்கள். குடும்பத்திற்குள் ஏதேனும் ஒரு பிரச்சனை உண்டாகி உங்களை சங்கடப்படுத்தும்.

பூராடம்: குடும்பத்தில் நெருக்கடி இருக்கும். பிள்ளைகள் வழியே உங்கள் உழைப்பு செல்லும். பெற்றோர்கள் வழியே எதிர்பார்த்த உதவிகள் இழுபறியாகும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் சங்கடப்படுவீர்கள். தொழில் முயற்சியில் வருவாய் உண்டாகி நிலைமைகளை சமாளிப்பீர்கள்.

உத்திராடம் 1: எதிர்ப்புகளை சந்தித்து வெற்றி பெறுவீர்கள். அரசு வழியில் அனுகூலம் காண்பீர்கள். அலைச்சல்கள் அதிகரித்து உடலில் சோர்வு உண்டாகும். உங்கள் வார்த்தைகளால் சங்கடங்களை சந்திக்க வேண்டியதாக இருக்கும். குடும்ப பொறுப்பு அதிகரிகரிக்கும்.


மகரம்


சுக்கிரன், செவ்வாய் நன்மைகளை வழங்குவார்கள். நள்ளாற்று நாயகனை வழிபடுவதின் வழியே சங்கடங்கள் விலகும்.

உத்திராடம் 2, 3, 4: ஞாயிறு மாலை வரை நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள் அதன்பின் செலவுகள் அதிகரிக்கும். உடல்நிலையில் கூடுதல் கவனம் தேவைப்படும். தொழில், உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருக்கும். வார்த்தைகளில் கவனம் தேவை. மனதில் ஏதேனும் குழப்பங்கள் உண்டாகும். உறவுகள் வழியே நெருக்கடிகள் தோன்றும்.

திருவோணம்: துணிச்சலாக செயல்பட்டாலும் அவற்றில் தடைகளை சந்திப்பீர்கள். மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும். தேவையற்ற சிந்தனைகளால் நல்லவர்களையும் இழப்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் இழுபறி நிலையே இருக்கும். தாயாரின் உடல்நிலையில் பாதிப்புகள் தோன்ற வாய்ப்பிருப்பதால் கவனம் தேவை.

அவிட்டம் 1, 2: வாரத்தின் முற்பகுதியில் உங்கள் முயற்சிகளில் லாபத்தைக் காண்பீர்கள். அதன்பின் பயணம், அலைச்சல் என்று தோன்றும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. யாருக்கும் வாக்குறுதி கொடுப்பதோ, ஜாமின் போடுவதோ வேண்டாம். உறவுகள் உங்களுக்கு எதிர்ப்பாகலாம். வாழ்க்கைத்துணையின் உடல்நலனில் கவனம் தேவை.


கும்பம்


குரு, சுக்கிரன், ராகு உங்களுக்கு நன்மைகளை வழங்குவார்கள். ஆலங்குடி குரு பகவானை மனதில் எண்ணி செயல்பட சிறப்புகள் தோன்றும்.

அவிட்டம் 3, 4: குடும்பத்தின் மீது பொறுப்பு ஏற்படும். வார்த்தைகளில் நிதானத்தைக் கடைபிடிப்பீர்கள். எதிர்பார்த்தவற்றில் சந்தோஷமான் நிலை உண்டாகி மகிழ்வீர்கள். புதிய சொத்துகள், வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். நீண்டநாள் திட்டங்கள் நிறைவேறும்.

சதயம்: புதிய தொழில் வாய்ப்புகள் உண்டாகும். தொழிலை விரிவு செய்யும் முயற்சி பலனளிக்கும். குடும்பத்தினரின் ஆதரவு கூடும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுகள் கிட்டும். எதிரிகளால் உண்டான சங்கடங்கள் விலகும். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3: எதிரிகளால் சங்கடங்கள் உண்டானாலும் அதை சமாளிப்பீர்கள். உடல்நிலையில் இருந்த பாதிப்புகள் விலகும். மனதில் எண்ணியதை செய்து முடிப்பீர்கள். பண வருவாய் உங்களை உற்சாகமாக்கும். புதிய தொழில் முயற்சி வெற்றியாகும். வேலை வாய்ப்பை எதிர்பார்த்திருந்தவர்களுக்கு நல்ல தகவல் வரும்.


மீனம்


சுக்கிரன், சனி, சூரியன் நன்மைகளை வழங்குவார்கள். குலதெய்வ வழிபாடு சங்கடங்களை விலக்கும்.

பூரட்டாதி 4: பிள்ளைகளின் கல்வி, திருமணம் குறித்த செயல்களில் ஈடுபடுவீர்கள். செலவுக்கேற்ற வருவாய் வந்து கொண்டிருக்கும். உங்கள் செயல்களில் வேகம் ஏற்பட்டு அதனால் நினைத்ததை சாதிப்பீர்கள். பூர்வீக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் விலகும்.

உத்திரட்டாதி: உங்கள் வார்த்தைகளால் எதிர்ப்புகளும் பிரச்னைகளும் தோன்றும். புதிய நண்பர்களால் பிரச்னைகள் உருவாகலாம். குடும்பத்தின் முன்னேற்றம் குறித்து யோசிப்பீர்கள். பெற்றோர் வழியில் இருந்த சங்கடங்கள் விலகும். விலகிச்சென்ற உறவுகள் உங்களைத் தேடி வருவார்கள்.

ரேவதி: எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். அரசு வகையில் தோன்றிய பிரச்னைகள் விலகும். புதிய வாகனம், இடம் வாங்கும் முயற்சிகள் பலிதமாகும். வார்த்தைகளில் கவனம் தேவையாக இருக்கும். பூர்வீக சொத்துகளில் இருந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். தந்தை வழியே ஆதரவு கூடும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X