நங்கநல்லூர் ஆஞ்சநேயர் திருக்கோயில் கும்பாபிஷேகம்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை நங்கநல்லூர் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் இன்று (20 ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது.இத்திருக்கோயிலில் பாலாலயம் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்றது. திருக்குடமுழுக்கை முன்னிட்டு 16ம் தேதி யாக சாலை வளர்க்கப்பட்டு, லட்சுமி, நரசிம்ம சுதர்ஷன ஹோமங்கள், விசேஷ சந்தி, இரண்டாம் கால பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 17 ம் தேதி அஷ்டபந்தன

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை நங்கநல்லூர் அருள்மிகு ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் இன்று (20 ம் தேதி) கும்பாபிஷேகம் நடைபெற்றது.



latest tamil news




இத்திருக்கோயிலில் பாலாலயம் கடந்த மாதம் 25ம் தேதி நடைபெற்றது. திருக்குடமுழுக்கை முன்னிட்டு 16ம் தேதி யாக சாலை வளர்க்கப்பட்டு, லட்சுமி, நரசிம்ம சுதர்ஷன ஹோமங்கள், விசேஷ சந்தி, இரண்டாம் கால பூஜை, ஹோமங்கள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து 17 ம் தேதி அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.


latest tamil news



19 ம் தேதி புண்யாஹவாசனம், காலசந்தி திருவாராதனம், அதிவாசத்ரய ஹோமம், வேதவிண்ணப்பம், சாற்றுமறை நிகழ்வு நடந்தது. இன்று கோபுரங்களுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் ஆன்மிக முக்கிய பிரமுகர்கள் , பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-மே-202212:34:46 IST Report Abuse
Ramesh Sargam நான் பிறந்து வளர்ந்த ஊரில் ஒரு விசேஷம். எனக்கு பெருமை. அந்த அஞ்சன புத்திரன், உலக மக்களை கொரானா போன்ற கொடிய வைரஸ்களிலிருந்து காப்பாற்றி, ஆரோக்கியமாக, சந்தோஷமாக, நிம்மதியாக இருக்கும்படி அருள்புரியவேண்டும். ஜெய் ஸ்ரீ ரேம். ஜெய் ஆஞ்சநேயா.
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
20-மே-202212:14:29 IST Report Abuse
Samathuvan கும்பாபிஷேகம் எதற்காக செய்கிறார்கள் என்று முதலில் நம் புராணத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள் மக்களே. அறிவு விருத்தியாகும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X