'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் எதிரொலி: கூடுதல் பறக்கும் படைகள் நியமனம்

Added : மே 20, 2022 | |
Advertisement
நாமக்கல் மாவட்டத்தில் 'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் பிடிபட்டதால், கூடுதலாக பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட அரசு பொதுத்தேர்வுகளை கண்காணிக்க, பொறுப்பாளராக, அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வில் முறைகேடுகளை தடுக்க, இவர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப் பட்டுள்ளன. கடந்த, 17ம் தேதி, பிளஸ்2

நாமக்கல் மாவட்டத்தில் 'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் பிடிபட்டதால், கூடுதலாக பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 உள்ளிட்ட அரசு பொதுத்தேர்வுகளை கண்காணிக்க, பொறுப்பாளராக, அரசு தேர்வுகள் துறை இணை இயக்குனர் பொன்குமார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேர்வில் முறைகேடுகளை தடுக்க, இவர் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்
பட்டுள்ளன. கடந்த, 17ம் தேதி, பிளஸ்2 கணித தேர்வின்போது, பறக்கும்படையினர் அதிரடியாக கொல்லிமலை, குமாரபாளையம், பள்ளிபாளையத்தில் உள்ள அரசுப்பள்ளி தேர்வு மையங்களில் தேர்வு தொடங்கும் முன்பே சோதனை நடத்தினர். இதில், 3 மையங்களிலும் சேர்த்து, ஒரு கிலோவுக்கு மேல் 'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் சில தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகள் 'மைக்ரோ' ஜெராக்ஸ் பிட் பேப்பரை பார்த்து தேர்வு எழுதுவது தெரியவந்துள்ளது. அதைத்தடுக்க தேர்வுத்துறை இணை இயக்குனர் உத்தரவுப்படி, குறிப்பிட்ட மையங்களில் அறை கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கொல்லிமலையில் உள்ள, 2 அரசுப்பள்ளிகளில் தேர்வு மையங்கள் செயல்படுகிறது. இங்கு முன்னதாக தேர்வு பணிக்கு ஆசிரியைகள் செல்ல மறுத்துவிட்டனர்.


ஆனால், தற்போது மாணவிகள் பிட் அடிப்பது தெரியவந்து உள்ளதால், அந்த மையத்துக்கு 4 ஆசிரியைகள் அறை கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பிட் பேப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்ட குமாரபாளையம், பள்ளிபாளையம் அரசு பள்ளி தேர்வு மையங்களிலும், மாணவிகளை சோதனை செய்யும் வகையில் அறை கண்காணிப்பாளர்கள் மாற்றப்பட்டு
உள்ளனர். மேலும், தேர்வு மையங்களை கண்காணிக்க கூடுதலாக பறக்கும்படைகளும்
நியமிக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X