''குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ பணி போட்டித்தேர்வுகளை கண்காணிக்க, 11 பறக்கும் படையினர் அமைக்கப்பட்டுள்ளனர்,'' என்று நாமக்கல் கலெக்டர் ஸ்ரேயாசிங் பேசினார். நாமக்கல் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, குரூப்-2ஏ பணிகளுக்கான போட்டித்தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம், கலெக்டர் ஸ்ரேயா சிங் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, குரூப்-2ஏ பணியிடங்களுக்கான போட்டித்தேர்வினை, 31,854 தேர்வர்கள் எழுத உள்ளனர். அறை ஒன்றுக்கு, 20 தேர்வர்கள் வீதம் தேர்வு எழுத ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இந்த தேர்வு நாளை (மே., 21ம் தேதி) காலை, 9:30 மணிக்கு துவங்கி, 12:30 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை எழுதும் தேர்வர்கள், தேர்வு மையத்திற்கு காலை, 8:30 மணிக்கே வந்து விடவேண்டும். முதலில் தேர்வர்களின் புகைப்படம், பெயர், பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்க்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். 9:00 மணிக்கு தேர்வு மைய கதவுகள் பூட்டப்படும் என்பதால், அதற்கு முன் வரும் தேர்வர்கள் மட்டுமே, தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படுவர்.
தேர்வுகளை கண்காணிக்க, துணை கலெக்டர்கள் நிலையிலான அலுவலர்கள் கொண்ட, 11 பறக்கும் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு தேர்வர்கள் செல்ல வசதியாக, அனைத்து தேர்வு மையங்களிலும் அரசு பஸ்கள் நின்று செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு கலெக்டர் பேசினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE