வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: உடல்நிலையை காரணம் காட்டி, சரண் அடைவதற்கு அவகாசம் வேண்டும் என சித்து சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனை நீதிமன்றம் ஏற்க மறுத்த நிலையில், பாட்டியாலா நீதிமன்றத்தில் சித்து சரணடைந்தார்.
பஞ்சாபில், 1988ல் சாலையில் நடந்த சண்டையில், ஒருவரை காயப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு குறித்து சித்து கூறுகையில், ''சட்ட நடவடிக்கைகளுக்கு கட்டுப்படுவேன்,'' என்றார்.
இந்நிலையில், சித்து சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, உச்சநீதிமன்ற நீதிபதி கன்வில்கர் அமர்வு முன்பு ஆஜராகி கூறுகையில், சித்து சரணடைவார். அவருக்கு உடல்நலன் சார்ந்த பிரச்னை உள்ளது. அது சரி செய்யப்பட வேண்டும். இதனால், சரணடைவதற்கு அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

ஆனால், சித்துவின் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்க மறுத்தது. இதனால், பாட்டியாலா நீதிமன்றத்தில் சித்து சரணடைந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE