பிரதமர் நாட்டை பாதுகாக்க வேண்டும் : ராகுல்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (31) | |
Advertisement
புதுடில்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தி உள்ளார்.கடந்த 2020ம் ஆண்டு சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் அத்துமீறியதை அடுத்து அதற்கும் நம் நாட்டுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இருநாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தன.
India Security, Territorial Integrity, Non Negotiable, PM, Defend Nation, Rahul Gandhi, Rahul, இந்தியா, பாதுகாப்பு, ராகுல், காங்கிரஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டில் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டுமென காங்கிரஸ் எம்.பி., ராகுல் வலியுறுத்தி உள்ளார்.

கடந்த 2020ம் ஆண்டு சீன ராணுவம் கிழக்கு லடாக்கில் அத்துமீறியதை அடுத்து அதற்கும் நம் நாட்டுக்கும் இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது. இருநாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்தன. ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான தொடர் பேச்சுவார்த்தைக்கு இரு தரப்பிலும் படைகள் குறைக்கப்பட்டன. சில இடங்களில் மட்டும் இருதரப்பும் படைகளை விலக்கி கொள்ளவில்லை. இதனிடையே எல்லையில் ராணுவ கட்டமைப்பை வலிமைப்படுத்த சீன பாங்காங் சோ அருகே மிகப்பெரிய பாலம் ஒன்றை கட்டியது.


latest tamil news


இந்நிலையில், பாங்காங் சோ ஏரியின் குறுக்கே, சீன ராணுவம் இரண்டாவதாக பெரிய பாலத்தை கட்டி வரும் செயற்கைக் கோள் புகைப்படம் வெளியாகி உள்ளது. இது குறித்து காங்., எம்.பி ராகுல் கூறியிருப்பதாவது: சீனா பாங்காங் பகுதியில் முதல் பாலம் கட்டியதற்கு இந்திய அரசு, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என்றது. சீனா பாங்காங்கில் இரண்டாவது பாலம் கட்டியுள்ளது. இதற்கும் இந்திய அரசு, நாங்கள் நிலைமையை கவனித்து வருகிறோம் என்றது.

இந்தியாவின் தேசிய பாதுகாப்பிலும், பிராந்திய ஒருமைப்பாட்டிலும் பேச்சுவார்த்தை என்பதற்கு இடமேயில்லை. தைரியமில்லாத, பணிவான பதில் ஒன்றும் செய்ய போவதில்லை. பிரதமர் மோடி நாட்டை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagar - Dukhan ,கத்தார்
21-மே-202203:24:59 IST Report Abuse
Nagar சீனாவை உள்ளே வர விட்டு நம் நிலங்களை ஆக்கிரமிக்க வைத்ததே நேரு தான். நம் நாட்டு நிலங்களை ஸ்ரீலங்காவுக்கு தாரை வார்த்து கொடுத்தது இந்திரா. கட்ச் அருகில் உள்ள நம் நிலங்களை பாகிஸ்தானுக்கு மன்மோகன் கொடுக்கும்போது அதை தடுத்து நிறுத்தியது மோதி அவர்கள் தான். நேருவில் தொடங்கி மன்மோகன் வரை நாட்டை துண்டாக்கியது காங்கிரஸ் தான். இந்த குடும்பத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள பாரத் ரத்னா விருதுகளை உடனே திரும்பப்பெறுவது அவசியம். பல ஊழல்களில் துணை போன மன்மோகனையும் கைது செய்யவேண்டும்.
Rate this:
Cancel
ரத்தினம் - சமயநல்லூர்,இந்தியா
21-மே-202201:33:48 IST Report Abuse
ரத்தினம் ஐயா நம் பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் கண்ணும் கருத்துமாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் தன் பணியைச் செவ்வனே செய்வதால்தான், உங்களைப் போன்றவர்களும் இங்கு சுகமாக சுதந்திரமாக உட்கார்ந்து கொண்டு இவ்வாறெல்லாம் கமெண்ட் அடிக்க முடிகிறது என்பதை மறக்கவேண்டாம். அவர்தான் உண்மையில் வாக்களித்தோர், வாக்களிக்காதோர் என்ற பாகுபாடு எதுவும் பார்க்காமல், ஒட்டுமொத்த தேசத்தின் பாதுகாப்புக்கும் எதிர்காலத்துக்கும் சேர்த்தே உழைக்கிறார், தன்னைச் சுற்றியுள்ள அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள் முதல் தொண்டர்கள்வரை அனைவரும் அவ்வாறே நடக்குமாறு பார்த்துக்கொள்கிறார் என்கிற உண்மை ஞாபகமிருக்கட்டும். ஜெய் ஹிந்த்
Rate this:
Cancel
Desi - Chennai,இந்தியா
21-மே-202201:30:00 IST Report Abuse
Desi இதுக்கு தானே நீ நேபாள் பொய் அந்த சீன வைரஸ் கூட பார்ட்டில இருந்த ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X