திரைப்படத்தை வாழ்த்தி பேனர்: போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்?

Added : மே 20, 2022 | கருத்துகள் (14) | |
Advertisement
பெரம்பலுார்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன், 41. இவர், பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சினிமா நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழகம் முழுதும் உள்ள நுாற்றுக்கணக்கான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இப்படம் பெரம்பலுாரில்
திரைப்படத்தை வாழ்த்தி பேனர்: போலீஸ் ஏட்டு சஸ்பெண்ட்?

பெரம்பலுார்: திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள கொப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கதிரவன், 41. இவர், பெரம்பலுார் மாவட்டம், பாடாலுார் போலீஸ் ஸ்டேஷனில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், சினிமா நடிகரும் எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி நடித்த நெஞ்சுக்கு நீதி திரைப்படம் தமிழகம் முழுதும் உள்ள நுாற்றுக்கணக்கான தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. இப்படம் பெரம்பலுாரில் இரண்டு தியேட்டரில் வெளியானது.

இந்த படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, பெரம்பலுார், அரியலுார், திருச்சி உட்பட தமிழகம் முழுதும் உதயநிதி ரசிகர்கள், ரசிகர் மன்றத்தினர், இளைஞர் அணியினர், தி.மு.க.வினர் டிஜிட்டல் பேனர் வைத்திருந்தனர். இதன் ஒரு பகுதியாக, நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து, கதிரவன், பெரம்பலுார் பாலக்கரை பகுதியில் முதல்வர் ஸ்டாலின் கையை நீட்டி மேடையில் மைக் முன் பேசியவாறும், போலீஸ் சீருடையில் உதயநிதி இருக்கும் போட்டோக்களுடன் டிஜிட்டல் விளம்பர பேனரை வைத்தார்.

தகவலறிந்த, பெரம்பலுார் போலீசார் இந்த விளம்பர பேனரை அந்த இடத்தில் இருந்து அகற்றினர். இது குறித்து, விசாரித்ததில் நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்து கதிரவன் தனது சொந்த செலவில் டிஜிட்டல் பேனர் வைத்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, ஏட்டு கதிரவன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பெரம்பலுார் மாவட்ட போலீசார் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
seshadri - chennai,இந்தியா
21-மே-202200:27:50 IST Report Abuse
seshadri பொறுத்திருங்கள் superintendent தண்ணி இல்லாத காட்டுக்கு உடனே மாற்றப்படுவார். யாரிடம் இதெல்லாம் நாங்கள் எல்லாம் உடன் பிறப்பா கொக்கா
Rate this:
Cancel
Kannan - Ramanathapuram,இந்தியா
20-மே-202222:42:12 IST Report Abuse
Kannan அறிவாலய வாசலில் கதவு திறந்து விடதான் லாயக்கு.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-மே-202222:20:17 IST Report Abuse
Ramesh Sargam இப்பொழுது என்ன நடக்கும். உதயநிதி அல்லது ஸ்டாலின், இந்த விஷயத்தில் தலையிட்டு, அந்த சஸ்பெண்ட் ஆன ஏட்டுக்கு பதவி உயர்வு கொடுத்து அழகு பார்ப்பார்கள். ஏட்டை சஸ்பெண்ட் செய்த உயர் அதிகாரியை சஸ்பெண்ட் செய்வார்கள் அல்லது பதவி குறைவு செய்வார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X