வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் சமீபத்தில் ராஜஸ்தானில் சிந்தனையாளர் மாநாடு நடைபெற்றது. ”இம்மாநாடு அர்த்தமுள்ளவற்றை அடைவதில் தோல்வியுற்றுள்ளது” என கூறி தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் காங்கிரஸ்காரர்களுக்கு அதிர்ச்சி தந்துள்ளார்.
ராஜஸ்தானின் உதய்பூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் சிந்தனையாளர் மாநாடு சமீபத்தில் கூடியது. இதில் சோனியா, ராகுல், பிரியங்கா மற்றும் கட்சியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியை மீண்டும் தேர்தலில் வெற்றிப் பாதைக்கு திருப்புவது, அதற்கான தடைகள், உத்திகள், செய்ய வேண்டிய சீர்திருத்தங்கள் ஆகியவை விவாதிக்கப்பட்டன. ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்ற முடிவும் எடுக்கப்பட்டது. 5 ஆண்டுகளுக்கு மேல் கட்சிப் பணியாற்றியவர்களுக்கு அதிலிருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சோனியா, ராகுல், பிரியங்கா, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குப் பிரச்னை இல்லை.

இந்நிலையில் காங்கிரசின் இம்மாநாடு குறித்து தேர்தல் வியூக பிரசாந்த் கிஷோர் கருத்துத் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: உதய்பூர் சிந்தனையாளர் மாநாடு குறித்து என்னிடம் தொடர்ந்து கருத்துக் கேட்கப்படுகிறது. எனது பார்வையில் இந்த மாநாடு அர்த்தமுள்ளவற்றை அடைவதில் தோல்வியுற்றுள்ளது. எதுவும் மாறாமல் பழைய நிலையே தொடர்கிறது. வரவிருக்கும் குஜராத், ஹிமாச்சல் தேர்தல் தோல்வி வரையாவது காங்கிரஸ் தலைமைக்கு சிறிது அவகாசம் அளிக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE