வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கரகாட்டம், பரத நாட்டியம், ஒயிலாட்டம் போன்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பிரமாண்ட வரவேற்பு அளிக்க, தமிழக பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
பிரதமர் மோடி, வரும் 26ல், தமிழகம் வருகிறார். சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். பல கோடி ரூபாய் மதிப்பிலான நலத் திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். தமிழக பா.ஜ., சார்பில், பிரமாண்ட வரவேற்பு அளிக்க, அக்கட்சியினர் முடிவு செய்துள்ளனர்.

விமான நிலையம் முதல் நேரு விளையாட்டு அரங்கம் வரை, சாலையின் இரு பக்கமும், 25 ஆயிரம் தொண்டர்கள், பா.ஜ., கொடிகளை கைகளில் ஏந்தி, பிரதமரை வரவேற்று கோஷங்களை எழுப்ப உள்ளனர். கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம் போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாகவும், வரவேற்பு அளிக்க திட்டமிட்டுள்ளனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
பிரதமர் வருகையை ஒட்டி, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தலைமையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மாநிலம் முழுதும் போலீசார் உஷார் நிலையில் இருக்கவும், அவசியம் இன்றி போலீசாருக்கு விடுமுறை தரக் கூடாது என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE