சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

உண்மையை உணருங்கள் மக்களே!

Updated : மே 21, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (16) | |
Advertisement
எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பெட்ரோல், டீசல், சமையல் காஸ் போன்றவற்றின் விலையை உயர்த்தி, மக்கள் பணத்தை, பா.ஜ., அரசு கொள்ளையடிக்கிறது. ஆனால், மக்களை திசை திருப்ப, மதப் பிரச்னையை உருவாக்குகின்றனர்' என, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார். இந்த பெட்ரோல், டீசல் விலைகளின் உண்மை
 உண்மையை உணருங்கள் மக்களே!

எஸ்.மணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'பெட்ரோல், டீசல், சமையல் காஸ் போன்றவற்றின் விலையை உயர்த்தி, மக்கள் பணத்தை, பா.ஜ., அரசு கொள்ளையடிக்கிறது. ஆனால், மக்களை திசை திருப்ப, மதப் பிரச்னையை உருவாக்குகின்றனர்' என, திரிணமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.


latest tamil news
இந்த பெட்ரோல், டீசல் விலைகளின் உண்மை நிலவரத்தை மக்கள் புரிந்து கொண்டால் மட்டுமே, மம்தாவின் குற்றச்சாட்டில், அரை சதவீதம் கூட, உண்மையில்லை என்பதை உணர முடியும். சென்னையில், நேற்றைய பெட்ரோல் விலை, 110.85 ரூபாய்; டீசல் விலை, 100.94 ரூபாய்.பெட்ரோல் விலை, 103.05 ரூபாயாக இருந்த போது... ஆக, லிட்டர் பெட்ரோலுக்கு மத்திய அரசு விதிக்கும் வரி, 19 ரூபாய் 50 காசுகள். மாநில அரசு விதிக்கும் வரி, 41 ரூபாய் 55 காசுகள்.மத்திய அரசு விதிக்கும் வரியை காட்டிலும், இரண்டு மடங்குக்கும் கூடுதலான வரியை விதித்து, நுகர்வோரின் தலையில், மசாலா கலந்த மிளகாயை தடவி, கஜானாவை நிரப்பி கொண்டிருக்கும் மாநில அரசுகள், 'மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும்; மத்திய அரசு வரியை குறைக்க வேண்டும்' என்று ஒப்பாரி வைத்து, பிலாக்கணம் பாடிக் கொண்டிருக்கின்றன.

இந்த பெட்ரோல், டீசலை, ஜி.எஸ்.டி., வரம்புக்குள் கொண்டு வந்து விட்டால், அவற்றின் விலை கணிசமாக குறைய வாய்ப்பு உண்டு; மக்களுக்கும் அதனால் பயன் கிடைக்கும்.ஆனால், அதை ஏற்க பல மாநில அரசுகள் மறுக்கின்றன. காரணம், ஜி.எஸ்.டி., வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் சென்று விட்டால், தமிழகம் உட்பட பல மாநிலங்களின் வருவாய் கணிசமாக குறைந்து விடும்.

அதனால், இந்த விலை உயர்வு விஷயத்தில், மத்திய அரசின் மீது பழியைப் போட்டு தப்பித்துக் கொள்ளப் பார்க்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசுகளே காரணமேயன்றி, மத்திய அரசு அல்ல.உண்மையை உணர்வீர் பொதுமக்களே!


சோனியா சிலையை திறப்பார் பேரறிவாளன்?என்.வைகைவளவன், மதுரை யிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

'ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளி' என, பேரறிவாளனை தண்டித்த உச்சநீதிமன்றமே, தற்போது, அவரை விடுதலை செய்துள்ளது. அடடா... இதைவிட வேறு என்ன புரட்சி இருக்க முடியும்? இதை, பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் நடத்திய சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி என, தி.மு.க., - அ.தி.மு.க., தலைவர்கள் கொண்டாடி, ஆனந்த தாண்டவம் ஆடுகின்றனர்.

அவர்கள் ஒன்றை மறந்து விட்டனர்... விடுதலை புலிகளின் கொலை வெறிக்கு பலியானவர் ராஜிவ் மட்டும் அல்ல; அவருடன் காவல் துறை அதிகாரிகள், கல்லுாரி மாணவி என, 16 பேர் பரலோகம் சென்றனர். அவர்களும் பச்சைத் தமிழர்கள் தானே.அற்புதம்மாள் நடத்தியது போல, இறந்து போன காவல்துறை அதிகாரிகள் குடும்பத்தினரும், நீதி கேட்டு சட்ட போராட்டம் நடத்தி இருந்தால், பேரறிவாளன் விடுதலை ஆகியிருப்பாரா என்பது கேள்விக்குறியே...

'பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டாலும், ராஜிவ் ஆன்மா நிச்சயம் அவரை மன்னிக்காது; கடவுளும் அவரை மன்னிக்க மாட்டார்' என, சாபம் விட்டிருக்கிறார், ராஜிவ் படுகொலையின் போது, வெடிகுண்டு விபத்தில் சிக்கி, உயிர் பிழைத்த இன்ஸ்பெக்டர் அனுசுயா. ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை சட்டசபையில் நிறைவேற்றி, பெரும் பாதகச் செயலை செய்தவர், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அதேநேரத்தில், எம்.ஜி.ஆர்., உயிரோடு இருந்திருந்தால், ராஜிவை கொலை செய்த பாவிகளை மன்னித்து இருக்க மாட்டார்.

ஆயுள் முழுதும் சிறையில் இருப்பது தான் ஆயுள் தண்டனைக்கு அர்த்தம். இந்த அரிச்சுவடி படித்த நீதிபதிகள், இப்போது தாங்கள் சொன்னதுக்கு மாறாக கொலை குற்றவாளியை விடுதலை செய்து புனிதராக்கி இருக்கின்றனர். இந்த நீதிபதிகளையும், ராஜிவ் ஆன்மா மன்னிக்குமா என்பது, 'டவுட்!' தான்.

'சட்டம் ஒரு இருட்டறை' என்று அண்ணாதுரை சொன்னது நுாற்றுக்கு நுாறு உண்மை. இனிமேல், ஆயுள் தண்டனை கைதிகள் யாரும் மனம் கலங்க வேண்டாம். உங்களை எல்லாம், புனிதர் என்று நாம கரணம் சூட்டி விடுதலை செய்ய, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தயாராக இருக்கின்றனர். கணவனை கொன்றதற்காக, பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு போராடிய, கற்புக்கரசி கண்ணகியின் சிலையை, தயவு செய்து சென்னை மெரினா கடற்கரையிலிருந்து அகற்றி விடுங்கள். அந்த இடத்தில், கணவனை கொன்ற கொலைகாரர்களை பெருந்தன்மையோடு மன்னித்த, காங்கிரஸ் தலைவர் சோனியாவின் சிலையை உடனே நிறுவுங்கள்.

அற்புதம்மாள் தலைமையில், சோனியா சிலையை பேரறிவாளன் கையால் திறக்கச் செய்து, திறப்பு விழாவை அமோகமாக நடத்துங்கள் முதல்வர் ஸ்டாலின் அவர்களே... அதை மேல் உலகத்திலிருந்து பார்த்து, கருணாநிதி ஆனந்தக் கண்ணீர் வடிப்பார்.'வாய்மையே வெல்லும்' என்று சொல்வதற்கு பதிலாக, இனிமேல், 'பொய்யே வெல்லும்' என்று சொல்லி மகிழ்வோம்.


சாபத்திலிருந்து தப்ப முடியாது!வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:


சமீப காலமாக, உச்ச நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகள் வினோதமாகவும், விசித்திரமாகவும் உள்ளன. அந்த வரிசையில், முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

பேரறிவாளனை, ௩௦ ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது கொடுமையாம். ஆனால், ராஜிவுடன் சேர்ந்து காவல்துறை அதிகாரிகளும், பொதுமக்களில் சிலரும் மனித வெடிகுண்டுக்கு பலியானது, நீதிபதிகளுக்கு கொடுமையாகத் தெரியவில்லை. ராஜிவ் கொலையாளிக்காக மனிதாபிமானம், மனித உரிமை பற்றி எல்லாம் குறிப்பிடும் நீதிபதிகள், மற்ற கொலையாளிகளுக்கும், இதேபோல மனிதாபிமான அடிப்படையில் விடுதலை வழங்குவரா... உச்ச நீதிமன்றம் தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, மற்ற ஆயுள்தண்டனை கைதிகளையும் விடுதலை செய்ய முன் வருமா?

சிறை வாசத்தால் வாழ்க்கையில் நிறைய இழந்திருப்பதாக பேட்டி கொடுக்கிறார் பேரறிவாளன். அவரது சதித்திட்டத்தால் பலியான, 16 பேரின் குடும்பம், வாழ்க்கையையே இழந்து நிற்கிறதே. அதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார் அவர்?ராஜிவ் கொலையாளிகளை நீதிமன்றம் விடுவிக்கலாம். ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் இடும் சாபத்திலிருந்து அவர்கள் தப்பிக்கவே முடியாது. 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
25-மே-202212:22:45 IST Report Abuse
Darmavan இதில் எல்லோருக்கும் தெரிவது கோர்ட்டுகள் எல்லாவற்றுக்கும் காரணம் சட்டத்தை தனக்கு வேண்டியது போல் வளைகின்ற்ன .எனவே கொலீஜியும் முறை நீக்கப்பட வேண்டும்.மோடி அரசு துணிய வேண்டும்.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
24-மே-202219:07:14 IST Report Abuse
jagan கொலைக்கு உதவுவது, கொலை செய்வதை விட கொடுமை. இவனை எல்லாம் வெளியில் விட்டால்??? இனி இந்தியாவிற்கு இவர்களே ஷங்கு ஊதி விடுவார்கள்
Rate this:
Cancel
asokan - Palani,இந்தியா
24-மே-202210:28:08 IST Report Abuse
asokan இந்தத் தீர்ப்பு அப்பட்டமான மனித குலத்துக்கு எதிரானது திரு ராஜீவ் உட்பட சுமார் இறுபது நபர்கள் படுகொலை நூற்றுக்கணக்கானோர் படுகாயம் பிளஸ் உடல் உறுப்புக்களை இழந்துள்ளனர் இவை அனைத்தும் ஓறு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல் பாராளுமன்றத்தில் ஒளிப்பதற்குத்தான். ஆம் திருமதி மரகதம் சந்திரசேகரின் வெற்றிப்பிரச்சாரத்திற்காகத்தான் திரு ராஜீவ் ஸ்ரீபெரும்புதூர் வந்தார். ஆனால் சமூக நீதி பேசும் கட்சிகள் பணத்துக்காக சோரம் போன நார்கள் இந்த சட்டவிரோத விடுதலையை ஆதரிப்பது ஆச்சரியம் இல்லை. உச்சநீதிமன்றம் ஒரேகுற்றத்திற்கு எதனை வித தீட்ர்புகளை வழங்கலாம்? இத்டற்கு ஒரு அளவுகோல் இல்லையா ? இன்று முடிவு செய்வதில் கவர்னர் கால தாமதம் செய்தார் அதனால் விடுதலை செய்கிரோம் என்று கூறும் உச்சநீதி மன்றம் , இந்த கொடுரக்குற்றவாளிகளை தூக்கிலிட கவர்னரும் ஜனாதிபதியும் தாமதம் செய்தபோது என்ன செய்தது, அன்று இதே உச்ச நீதிமன்றம் இதோ தீர்ப்பு இருக்கிறது நாங்களே இவர்களை தூக்கிலிடுகிரோம் அனா இந்த மாபாதகர்களை தூங்கிவிட்டுக்க வேண்டியது தானே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X