காங்கிரஸ் படுதோல்வி அடையும்; தேர்தல் நிபுணர் பிரசாந்த் ஆரூடம்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
புதுடில்லி : ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர்கள் கூட்டம் தோல்வியில் முடிந்ததாக விமர்சித்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர், ''வரவிருக்கும் குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்., படுதோல்வி அடையும்,'' என, ஆரூடம் கூறியுள்ளார்.பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வரும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர்,
காங்கிரஸ் படுதோல்வி அடையும்;   தேர்தல் நிபுணர் பிரசாந்த் ஆரூடம்


புதுடில்லி : ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த காங்கிரஸ் சிந்தனையாளர்கள் கூட்டம் தோல்வியில் முடிந்ததாக விமர்சித்த தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோர், ''வரவிருக்கும் குஜராத், ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்., படுதோல்வி அடையும்,'' என, ஆரூடம் கூறியுள்ளார்.

பல்வேறு கட்சிகளுக்கு தேர்தல் ஆலோசகராக பணியாற்றி வரும் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், சமீபத்தில் காங்கிரசில் இணைய போவதாக பேச்சு எழுந்து பரபரப்பு ஏற்பட்டது. அக்கட்சியை மீண்டும் வலுப்பெற செய்ய பல்வேறு ஆலோசனைகளை பிரசாந்த் கிஷோர் அளித்தார்.

இது தொடர்பாக, காங்., இடைக்கால தலைவர் சோனியா வுடன் நடந்த பலகட்ட பேச்சில் முடிவு எட்டப்படாததை அடுத்து, அக்கட்சியில் இணையும் முடிவை அவர் கைவிட்டார்.இந்நிலையில், ராஜஸ்தானின் உதய்பூரில், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் கூட்டம் நடந்தது. இதில் கட்சியை சீரமைப்பது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இக்கூட்டம் குறித்து தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர் கூறியதாவது:காங்கிரஸ் சிந்தனையாளர்கள் கூட்டம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு என்னிடம் தொடர்ந்து கேட்கின்றனர்.

அக்கூட்டத்தில் அர்த்தமுள்ள முடிவு எதுவும் எட்டப்படவில்லை. காங்., தலைமைக்கு சிறிது காலம் அவகாசம் அளித்து, தற்போதைய நிலை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், வரவிருக்கும் குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல்களில் காங்., படுதோல்வி அடையும்.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
21-மே-202217:11:18 IST Report Abuse
thamodaran chinnasamy வியாபாரம் படியவில்லைப்போலும் , இந்த மட்டமான மூர்கனித்தில் ஆலோசனைக்கேட்கும் அரசியல் வியாதியஸ்த்தர்களைச்சொல்லவேண்டும் , இவனைவிட கேடுகெட்ட ஜென்மங்கள் இந்த அரசியல் வியாதியஸ்த்தர்கள் .
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-மே-202214:21:04 IST Report Abuse
Bhaskaran Our maanilathuku முன்னூறு கோடி பீஸ் கொடுத்தால் ஓகே வா நைனா
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
21-மே-202213:23:01 IST Report Abuse
Thiagarajan Kodandaraman நாட்டுக்கு எதிராகவும் அப்பாவிகளுக்கு எதிராகவும் இருப்பவர்கள் என்றும் வாழ்ந்ததில்லை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X