'டிஜிட்டல்' வெற்றிக்கு மோடி அரசு காரணம்; திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் புகழாரம்

Added : மே 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : ''இந்திய பொருளாதாரம், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்ட போது, இது மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என விமர்சிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிக் காட்டியுள்ளது,'' என நடிகர் மாதவன், 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பேசினார்.ஐரோப்பிய நாடான பிரான்சில், 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டு திரைப்பட
'டிஜிட்டல்' வெற்றிக்கு மோடி அரசு காரணம்;  திரைப்பட விழாவில் நடிகர் மாதவன் புகழாரம்


புதுடில்லி : ''இந்திய பொருளாதாரம், 'டிஜிட்டல்' மயமாக்கப்பட்ட போது, இது மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும் என விமர்சிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிக் காட்டியுள்ளது,'' என நடிகர் மாதவன், 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் பேசினார்.

ஐரோப்பிய நாடான பிரான்சில், 75வது கேன்ஸ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டு திரைப்பட விழாவில், இந்திய திரையுலக விழா குழுவினர் கவுரவிக்கின்றனர். இதையடுத்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்குர் தலைமையில், இந்திய திரை நட்சத்திரங்கள், படைப்பாளிகள் கேன்ஸ் சென்றுள்ளனர்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ் திரைப்பட நடிகர் மாதவன் பேசியதாவது:சாமானியர்களுக்கும் பணப்பரிவர்த்தனையை எளிமையாக்கும் விதமாக, பிரதமர் மோடி டிஜிட்டல் பொருளாதாரத்தை அறிவித்தபோது, 'இது மிகப்பெரிய தோல்வியை சந்திக்கும்' என பல நாட்டு பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

'இந்தியா போன்ற நாடுகளில், 'ஸ்மார்ட் போன்'களை எப்படி பயன்படுத்துவது என்பது விவசாயிகளுக்கு தெரியாது' என, விமர்சிக்கப்பட்டது. ஆனால், 'டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனை துவங்கிய இரண்டு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையாக விளங்குகிறது.

தங்களுக்கான பணம் வங்கிக் கணக்கில் வந்து சேர்ந்துவிட்டதா என்பதை தெரிந்து கொள்ள, விவசாயி களுக்கு யாரும் சொல்லித்தர வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அது தான் புதிய இந்தியா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு இதை மிகப்பெரிய வெற்றியாக மாற்றிக் காட்டிஉள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja - Coimbatore,இந்தியா
24-மே-202209:48:30 IST Report Abuse
Raja விட்டா இந்தியாவிற்கு கணினியை அறிமுகம் செய்ததே நம்ம ஜி தான் என்றும் சொல்லுவார். கால கொடுமை. எல்லாத்தையும் கேட்டு தான் ஆகணும். தங்களுக்கு முழு அறிவு இல்லாத விஷயங்களில் கருத்து தெரிவிக்கும் இடது சாரி பிரபலங்களை போலவே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாக இவர் போன்ற சிலரும் கருத்து சொல்கின்றனர். ரிசெர்வ் வங்கி தகவலின் படி பண மதிப்பிழப்பின் போது 17.97 லட்சம் கோடியாக இருந்த ரூபாய் நோட்டு புழக்கம் 2022 இல் 30 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நடு தட்டு மற்றும் மேல் தட்டு மக்களிடம் டிஜிட்டல் பரிவர்த்தனை சற்று உயர்ந்திருக்கலாமே அன்றி விவசாயிகள் எல்லாம் இந்த முறைக்கு மாறிவிட்டார்கள் என்பதை எதன் அடிப்படையில் இவர் சொல்கிறார் என்று தெரியவில்லை.
Rate this:
Cancel
jagan - Chennai,இலங்கை
22-மே-202217:11:10 IST Report Abuse
jagan இனி இவர் ஜாதி பற்றி தீய முக உரக்க பேசும்
Rate this:
Cancel
மிளிர்வன் - AKL,நியூ சிலாந்து
21-மே-202214:15:51 IST Report Abuse
மிளிர்வன் ஐயோ.. இப்போ ஒலகநாயகன் கடுகடு'ன்னு ஆயி புரியாத்தமில்ல டி(வீ)ட்ட போறார்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X