போனில் அழைப்பவர் பெயர் தோன்ற கே.ஒய்.சி.,யை பயன்படுத்த 'டிராய்' திட்டம்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான 'டிராய்' போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை அறிவதற்கான கே.ஒய்.சி., தரவின் அடிப்படையில், அவரது பெயர் போனின் திரையில் தோன்றுமாறு செய்வது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது.வழக்கமாக நமது அறிமுக வட்டத்துக்குள் இல்லாத அல்லது தெரியாத நபர் நம்மை அழைக்கும்போது, அவரது எண் மட்டுமே திரையில் பளிச்சிடும். ஆனால்,
KYC, trai, unknown caller

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : இந்திய தொலைதொடர்பு ஆணையமான 'டிராய்' போனில் ஒருவர் அழைக்கும்போது, வாடிக்கையாளர் குறித்த தகவலை அறிவதற்கான கே.ஒய்.சி., தரவின் அடிப்படையில், அவரது பெயர் போனின் திரையில் தோன்றுமாறு செய்வது குறித்த ஆலோசனையில் இறங்கி உள்ளது.

வழக்கமாக நமது அறிமுக வட்டத்துக்குள் இல்லாத அல்லது தெரியாத நபர் நம்மை அழைக்கும்போது, அவரது எண் மட்டுமே திரையில் பளிச்சிடும். ஆனால், அழைப்பவர் யார் என்பது பார்த்ததும் தெரியாது. இப்பிரச்னையை தீர்க்க உதவும் வகையில் சந்தையில் சில செயலிகள் ஏற்கனவே இருக்கின்றன. எனினும் அவை அவ்வளவு துல்லியமாக இருப்பதில்லை. இதற்கு பதிலாக, கே.ஒய்.சி., தரவுகளை பயன்படுத்தும் பட்சத்தில், நம்மை அழைப்பது யார் என்பது துல்லியமாக தெரிந்துவிடும். மூன்றாம் நபர் செயலிகளை நம்ப வேண்டிய தேவையும் இருக்காது.


latest tamil news



ஆணையம், தனக்கு வந்த ஆலோசனையின் அடிப்படையில், இந்த முயற்சியில் இறங்க திட்டமிட்டுள்ளது. இதற்கான பணிகள் இன்னும் இரண்டொரு மாதங்களில் துவங்கும் என்றும் டிராய் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி அறிமுகம் ஆகும் பட்சத்தில், நம்மை அழைப்பது யார் என்பதை துல்லியமாக அறிந்து, அந்த அழைப்பை ஏற்பதா அல்லது, விடுப்பதா என்ற முடிவை எளிதாக எடுக்க முடியும்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
20-மே-202223:34:13 IST Report Abuse
அசோக்ராஜ் லாங் ஓவர் ட்யூ. சீக்ரம் ஆவட்டும்.
Rate this:
Cancel
Krishna - Dindigul,யூ.எஸ்.ஏ
20-மே-202222:34:21 IST Report Abuse
Krishna வீட்ல ஒருத்தர் வீட்டுல இருக்க அதனை பேருக்கும் சிம் வாங்கி குடுத்துருக்கலாம். அப்ப யார் பேரை காட்டுவீங்க....இது சரியான வழிமுறையாக தோன்ற வில்லை.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
20-மே-202222:17:22 IST Report Abuse
Fastrack இறந்துபோன நபர்களின் டெலிபோன் நம்பர்கள் நீக்க என்ன வழி முறைகள் ..ரீசார்ஜ் செய்யும்போது ஆதார் புழக்கத்தில் இருக்கா என்று செக் பண்ணலாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X