நாங்கள் துறவிகள் அல்ல: சுப்ரீம் கோர்ட் நீதிபதி

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (19) | |
Advertisement
புதுடில்லி,-''நாங்கள் துறவிகள் இல்லை; சில நேரங்களில் பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார். உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது மூத்த நீதிபதியாக இருக்கும் நாகேஸ்வர ராவ், வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இவர் அடுத்த மாதம் ௭ம் தேதி ஓய்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி,-''நாங்கள் துறவிகள் இல்லை; சில நேரங்களில் பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார்.latest tamil newsஉச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது மூத்த நீதிபதியாக இருக்கும் நாகேஸ்வர ராவ், வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இவர் அடுத்த மாதம் ௭ம் தேதி ஓய்வு பெறுகிறார். இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்துக்கு ௨௩ம் தேதி முதல், ஜூலை ௧௦ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதனால், நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு, நேற்று தான் கடைசி பணி நாளாக அமைந்தது. இதையொட்டி, உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நேற்று பிரிவுபசார விழா நடந்தது.இதில் நீதிபதி நாகேஸ்வர ராவ் பேசியதாவது: உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியது, மிகவும் சிறப்பாக இருந்தது.


latest tamil newsஅதேநேரத்தில் வழக்கறிஞர் பணி மீதான எனது பற்று, இப்போதும் நீடிக்கிறது. நீதிபதி பணிக்காலத்தில், சக நீதிபதிகளிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். நீதிபதிகள் துறவிகள் அல்ல; சில நேரங்களில் பணிச்சுமையால் நீதிபதிகளும் நெருக்கடிக்கு உள்ளாவர். நானும், அது போன்ற சூழ்நிலைகளை சந்தித்து உள்ளேன்.

அந்த சமயத்தில், நான் கோபப்பட்டு பேசியிருக்கலாம். என் வார்த்தைகள் சிலரை புண்படுத்திஇருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாரபட்சமின்றி தான் நீதி வழங்குகிறோம். ஆனால், அது ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், மறுதரப்புக்கு வருத்தத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.இவ்வாறு அவர் பேசினார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சொலிசிட்டர் ஜெனரல் வேணுகோபால் உட்பட பலரும், நாகேஸ்வர ராவை பாராட்டி பேசினர்

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s t rajan - chennai,இந்தியா
22-மே-202213:32:51 IST Report Abuse
s t rajan துறவு இல்லாவிட்டாலும் அறம் வழுவாதிருக்க வேண்டும், அல்லவா? சமீபத்திய பல நீதிமன்ற தீர்ப்புகள் இந்த சந்தேகத்தை எழுப்புகின்றன. மேலும் நீதி மன்றங்கள் எடுத்துக் கொள்ளும் பற்பல ஆண்டு கால அவகாசம், அதாவது காலம் கடந்த நீதி, பெரும் அநீதியாகத் தங்களுக்கு தோன்ற வில்லையா? Justice delayed is justice denied.
Rate this:
Cancel
anuthapi - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
22-மே-202210:57:54 IST Report Abuse
anuthapi உலக வரலாற்றிலேயே முதன் முதலாக குற்றம் சாட்ட பற்றவினர் வீட்டீர்கே நீதி சென்று விசாரணை செய்தது நினைவிற்கு வருகிறது.
Rate this:
Cancel
21-மே-202216:12:08 IST Report Abuse
theruvasagan நான் முற்றும் துறந்த முனிவனும் அல்ல. அப்படீன்னு யாரோ ஒருத்தர் எப்பவோ பேசினது இப்ப எதுக்கு என் ஞாபகத்துக்கு வருதுன்னு தெரியல.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X