டிக்கெட் பரிசோதகரால் தள்ளி விடப்பட்ட பயணிக்குரூ.10.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சென்னை : டிக்கெட் பரிசோதகரால் பாதிக்கப்பட்ட பயணிக்கு, தெற்கு ரயில்வே 10.60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 45. கடந்த 1998ல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு பயணிக்க, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்தார். இரண்டாம் வகுப்பு பெட்டியில் கூட்டம் அதிகமாக
டிக்கெட் பரிசோதகரால் தள்ளி விடப்பட்ட பயணிக்குரூ.10.60 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு


சென்னை : டிக்கெட் பரிசோதகரால் பாதிக்கப்பட்ட பயணிக்கு, தெற்கு ரயில்வே 10.60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தை சேர்ந்தவர் மாரியப்பன், 45. கடந்த 1998ல் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்னைக்கு பயணிக்க, முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்தார். இரண்டாம் வகுப்பு பெட்டியில் கூட்டம் அதிகமாக இருந்தது.இதனால், இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் பயணிக்க, டிக்கெட் பரிசோதகரிடம் அனுமதி கோரினார்;

அதற்கான கூடுதல் கட்டணத்தை செலுத்தி விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.மறுத்த டிக்கெட் பரிசோதகர், முன்பதிவு பெட்டியில் ஏறிய மாரியப்பனை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளி விட்டார். ரயிலுக்கும், நடை மேடைக்கும் இடையில் சிக்கி, அவர் பலத்த காயமடைந்தார்.

சம்பவம் குறித்து, தெற்கு ரயில்வேயில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்காததால், சென்னை மாவட்ட வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கில், மாரியப்பனுக்கு தெற்கு ரயில்வே, 10.60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, 2014ல் உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, தெற்கு ரயில்வே பொது மேலாளரால், சென்னையில் உள்ள மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி சுப்பையா, நீதித்துறை உறுப்பினர் வெங்கடேச பெருமாள் ஆகியோர், மாரியப்பனுக்கு 10.60 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது சரிதான் என, உத்தரவிட்டனர். தெற்கு ரயில்வே பொது மேலாளரின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
20-மே-202223:35:11 IST Report Abuse
Ramesh Sargam நுகர்வோர் நீதிமன்ற தீர்ப்பு சரியானதுதான். இதுபோன்ற நீதிமன்றங்கள் இல்லாவிட்டால், மக்களின் பிரச்சினைகளுக்கு முடிவு காணவே முடியாது. இந்த பயணியாவது முன்பதிவில்லா இரண்டாம் வகுப்பு டிக்கெட் எடுத்து ரயிலில் ஏறினார். 'அன்று' ஒருவர், டிக்கெட் எடுக்காமலேயே ரயிலில் ஏறி, சாமர்த்தியமாக டிக்கெட் பரிசோதகரிடம் சிக்காமல், சென்னை வந்து, அரசியலில் குதித்து, தமிழ் மாநிலத்தின் முதல்வர் ஆனார். ஆஹா, என்னே அவர் திறமை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X