துப்பாக்கி, ஆயுதங்கள் தயாரிப்பு; இரண்டு பட்டதாரிகளுக்கு 'காப்பு'

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
ஓமலுார் : துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை தயாரித்த, பி.இ., - எம்.சி.ஏ., படித்த இரு பட்டதாரிகளை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையிலான போலீசார், புளியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சேலத்தில் இருந்து ஓமலுார் நோக்கி, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப் பின்
துப்பாக்கி, ஆயுதங்கள் தயாரிப்பு;  இரண்டு பட்டதாரிகளுக்கு 'காப்பு'


ஓமலுார் : துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களை தயாரித்த, பி.இ., - எம்.சி.ஏ., படித்த இரு பட்டதாரிகளை, போலீசார் கைது செய்தனர்.சேலம் மாவட்டம், ஓமலுார் டி.எஸ்.பி., சங்கீதா தலைமையிலான போலீசார், புளியம்பட்டியில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, சேலத்தில் இருந்து ஓமலுார் நோக்கி, 'ஸ்பிளண்டர்' பைக்கில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தனர்.அதில், இரண்டு கைத்துப்பாக்கி, துப்பாக்கி செய்வதற்கான உதிரி பாகங்கள், கத்தி, தோட்டா, வெடி மருந்து, முகமூடி உள்ளிட்ட ஆயுதங்கள் இருந்தன. ஓமலுார் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்த போலீசார், இருவரையும் நேற்று கைது செய்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது:சேலம், செவ்வாய்பேட்டையைச் சேர்ந்த ஜெயகுமார் மகன் சஞ்சய் பிரகாஷ், 25; பி.இ., பட்டதாரி. மற்றொருவர், சேலம், கிச்சிப்பாளையத்தைச் சேர்ந்த முத்து மகன் நவீன் சக்கரவர்த்தி, 25; எம்.சி.ஏ., படித்தவர். நண்பர்களான இருவரும், சேலம், செட்டிச்சாவடியில் வீடு எடுத்து, 'யு டியூப்' சமூக வலைதளத்தில், கைத்துப்பாக்கி செய்வது எப்படி என பார்த்து, தயாரித்து வந்துள்ளனர். கத்தி, தோட்டா உள்ளிட்ட ஆயுதங்களையும் அவர்கள் தயாரித்துஉள்ளனர்.

அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளோம். மக்கள், சுற்றுச்சூழலுக்கு எதிராக உள்ளவர்களை ஒழித்துக்கட்ட ஆயுதங்களை தயாரித்ததாக இருவரும் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.இவ்வாறு போலீசார் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NicoleThomson - chikkanayakanahalli , tumkur dt and Bangalore, ,இந்தியா
21-மே-202203:46:43 IST Report Abuse
NicoleThomson இங்கே மாற்று கருத்து தெரிவிட்தா கழகத்தின் ஆட்சியில் இருக்கும் காவலர்கள் நம் மீதும் ???
Rate this:
Cancel
Samathuvan - chennai,இந்தியா
20-மே-202223:32:56 IST Report Abuse
Samathuvan இதுதான் இந்திய சுய சார்பு திட்டமோ? பாவம் அவர்களை விட்டு விடலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X