தமிழில் பேசுங்கள்!: ரயில்வே ஊழியர்களுக்கு உத்தரவு.. மத்திய அமைச்சர் வைஷ்ணவ் 'கறார்'

Updated : மே 22, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (20+ 16) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தமிழ் கற்க வேண்டும் என்றும், தமிழில் பேச வேண்டும் என்றும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தி உள்ளார்.சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். தயாரிப்பு
ரயில்வே ஊழியர்கள், தமிழில் பேசுங்கள், மத்திய அமைச்சர், வைஷ்ணவ், கறார்

சென்னை: தமிழகத்தில் பணிபுரியும் வட மாநில ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தமிழ் கற்க வேண்டும் என்றும், தமிழில் பேச வேண்டும் என்றும், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவுறுத்தி உள்ளார்.சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., எனப்படும் ரயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலையில், மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
தயாரிப்பு பணிஒரு மணி நேரம் நடந்த ஆய்வின்போது, 'வந்தே பாரத்' ரயிலுக்கான பிரத்யேக பெட்டிகள், இதர பெட்டிகள், தயாரிப்பு பணிகள், பணியாளர்களின் பாதுகாப்பு குறித்து கேட்டறிந்தார். இதையடுத்து, அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த 12 ஆயிரமாவது எல்.ஹெச்.பி., ரயில் பெட்டியை கொடிஅசைத்து துவக்கி வைத்தார்.

பின், அமைச்சர் அளித்த பேட்டி: பிரதமர் நரேந்திர மோடியின் கனவின்படி, சிறந்த பயண அனுபவம், மேம்பட்ட பாதுகாப்பு, அதிக பயணியர் பயணம் செய்ய வசதி போன்றவற்றில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், சர்வதேச அளவுக்கு தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

நாட்டில் தற்போது, 50 ரயில் நிலையங்கள் தரம் உயர்த்தும் பணிகள் நடக்கவுள்ளன. தமிழகத்தில் முதல் கட்டமாக, எழும்பூர், மதுரை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி, காட்பாடி ஆகிய ஐந்து நிலையங்களும் பல்வேறு வசதிகளுடன் மேம்படுத்தப்படும். இந்த பட்ஜெட்டில், தெற்கு ரயில்வேக்கு மட்டும், 3,860 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இது, காங்., ஆட்சியுடன் ஒப்பிடுகையில், மூன்று மடங்கு அதிகமாகும். நாட்டின் முக்கிய துறைமுகங்களை, நகர், கிராமப்புறங்களை இணைக்கும் வகையில், ரயில்வே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.சர்வதேச தரத்துடன் ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட முதல் வந்தே பாரத் விரைவு ரயில், புதுடில்லி - வாரணாசி இடையே இயக்கப்படுகிறது. வரும் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டு வந்தே பாரத் விரைவு ரயில்கள் இயக்கப்படும். இதேபோல், 75 ரயில்கள் இங்கு தயாரிக்கப்பட உள்ளன. இந்திய ரயில்வே தனியார் மயமாக்கப்படாது. 'கவச்' எனப்படும் ரயில் பாதுகாப்பு கருவி போன்ற நவீன தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்படும்.

கூடுதல் வசதிகள்காலத்துக்கு ஏற்றது போல், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் பயணியருக்கான கூடுதல் வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், மணிக்கு 180 கி.மீ., வேகத்தில் செல்லும் வகையில், ரயில் பாதைகள் வரும் ஆண்டுகளில் மேம்படுத்தப்படும். உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வந்தே பாரத் ரயிலுக்கான சக்கரங்கள், இந்தியாவில் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகத்தில் பணிபுரியும் ரயில்வே அதிகாரிகள், பணியாளர்கள், தமிழ் கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பயணியரிடம் தமிழில் பேச வேண்டும் என்றும் அறிவுறுத்திஉள்ளோம். அப்போது தான், தெற்கு ரயில்வே சார்பில் ரயில் பயணியருக்கு சிறப்பான சேவையை அளிக்க முடியும்.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை - குஜராத் மாநிலம், அகமதாபாத் இடையே 'புல்லட் ரயில்' இயக்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. தென் மாநிலங்களிலும் புல்லட் ரயில் இயக்குவதற்கான வாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் ரயில்வே திட்டங்களை மேற்கொள்ள, மாநில அரசுடன் புதிய ஒப்பந்தம் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, ஐ.சி.எப்., பொது மேலாளர் ஏ.கே.அகர்வால், தெற்கு ரயில்வே பொது மேலாளர் பி.ஜி.மால்யா, ஐ.சி.எப்., தலைமை இயந்திரவியல் பொறியாளர் எஸ்.ஸ்ரீநிவாஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி ஆகியோர் உடனிருந்தனர்.

தமிழில் நலம் விசாரிப்பு!

ஐ.சி.எப்., தொழிற்சாலைக்குள் நுழையும்போது, அங்குள்ள பணியாளர்களிடம், ''வணக்கம், எப்படி இருக்கிறீர்கள்?'' என, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழில் கேட்டார்; அங்குள்ளவர்கள் நலமாக இருப்பதாக தெரிவித்தனர். அதற்கு, 'நன்றி' என தமிழில் கூறினார். பின்னர், அமைச்சருடன் பணியாளர்கள் போட்டோ எடுத்துக் கொண்டனர்.இதேபோல், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 'ஒரு ரயில் நிலையம்; ஒரு பொருள்' என்ற திட்டத்தின் கீழ், 'காஞ்சி பட்டுச் சேலை ஸ்டால்' அமைக்கப்பட்டு உள்ளது. அதை, அமைச்சர் பார்வையிட்டார்.Advertisement
வாசகர் கருத்து (20+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.n. Dhasarathan - chennai,இந்தியா
22-மே-202219:52:31 IST Report Abuse
K.n. Dhasarathan தமிழகத்தில் ரயில்வே பனி செய்பவர்கள் தமிழ் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார் ரயில்வே அமைச்சர், நல்லது. ஆனால் தமிழக ஆட்களுக்கு ரயில்வே வேலையே மறுக்க படுகிறதே ? பணியில் தேர்வு செய்யப்பட்டு இருந்தவர்களைக்கூட நிறுத்தி காத்திருப்போர் பட்டியலில் வைத்துவிட்டு, உத்திர பிரதேச ஆட்களுக்கு இங்கே பனி நியமனம் எப்படி ? உங்களுக்கு தெரியாதா ?. அல்லது தெரியாதது போல நடிப்பா ?. ஏம்.பி சு. வெங்கடேசன் தெரியுமா ? அவர் கடிதம் எழுதி பிறகு அந்த நியமனத்தை நிறுத்தியது தெரியுமா? தெரியாதா ? . இங்கே மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.ஞாபகம் இருக்கட்டும்.
Rate this:
Cancel
Saravanan - Denver,யூ.எஸ்.ஏ
21-மே-202220:58:23 IST Report Abuse
Saravanan எந்த ஊர்ல வேலை பார்த்தாலும் அந்த ஊரின் மொழியை கத்துக்கணும். இதை தமிழர்கள் அறிவர். ஒரு நாடு அல்லது நிலப்பரப்பு மக்கள் அடிமைப்பட்டு இருந்தால் ஆள்பவன் மொழியை அடிமைகள் கற்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பர்.
Rate this:
Cancel
Venugopal S -  ( Posted via: Dinamalar Android App )
21-மே-202218:07:00 IST Report Abuse
Venugopal S ஆமாம் நீங்கள் தமிழ் கற்றுக் கொள்ளுங்கள், ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்கள் எல்லோரும் நம்முடன் ஹிந்தியில் மட்டுமே பேச வேண்டும்.
Rate this:
Nagar - Dukhan ,கத்தார்
22-மே-202207:49:51 IST Report Abuse
Nagarரயில் மந்திரி கூறியது சரியே. தமிழ் நாட்டில் வேலை செய்யும் வடஇந்திய ரயில் ஊழியர்கள் தமிழ் கற்று தமிழில் பேசவேண்டும் என்கிறார். அது சரியே. தமிழர்களும் ஹிந்தி கற்று ஹிந்தியில் பேச முயற்சிக்கவேண்டும். அப்போதுதான் தேச ஒற்றுமை வலுவாகும். ஏட்டிக்கு போட்டி பேசுவது சரியல்ல...
Rate this:
K.n. Dhasarathan - chennai,இந்தியா
23-மே-202220:42:44 IST Report Abuse
K.n. Dhasarathanஅதற்காக ஹிந்தியை திணிப்பது சரியா ? நன்றாக புரிந்து கொள்ளுங்கள் ஹிந்தியை எதிர்க்கவில்லை , ஹிந்தி திணிப்பதுதான் எதிர்க்கிறோம். ரயில்வே கடைநிலை ஊழியர்கள் நியமனத்தில் 115 பேருக்கு 95 G per vada இந்தியர்கள் என்றால் அது திணிப்பு இல்லையா ? பயண சீட்டில், முன் பதிவில் தமிழில் நீங்கலாக போடீர்களா? போராட்டம் என்ற பின் தானே வந்தது ? அதற்கு பெயர் என்ன ? ஏட்டிக்கு போட்டியா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X