லண்டன் மாநாட்டில் தி.மு.க.,பங்கேற்பை ரத்து செய்த ராகுல்

Updated : மே 20, 2022 | Added : மே 20, 2022 | கருத்துகள் (24) | |
Advertisement
ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று நடந்த சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். இதில் பங்கேற்க தி.மு.க.,வுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ராகுல் ரத்து செய்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.'பிரிட்ஜ் இந்தியா' என்ற அமைப்பு சார்பில், லண்டனில் 'இந்தியாவுக்கான சிந்தனைகள்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ்

ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் நேற்று நடந்த சர்வதேச மாநாட்டில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் பங்கேற்றார். இதில் பங்கேற்க தி.மு.க.,வுக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ராகுல் ரத்து செய்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.



latest tamil news


'பிரிட்ஜ் இந்தியா' என்ற அமைப்பு சார்பில், லண்டனில் 'இந்தியாவுக்கான சிந்தனைகள்' என்ற தலைப்பில் சர்வதேச மாநாடு நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ் எம்.பி., ராகுல், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள் தேஜஸ்வி யாதவ், மனோஜ் குமார் ஜா, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவர் கே.டி.ராம ராவ். மார்க்சிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொயித்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


latest tamil news



இந்த மாநாட்டில் பங்கேற்க, தி.மு.க., சார்பில் அக்கட்சி எம்.பி., திருச்சி சிவாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட பேரறி வாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்த விவகாரத்துக்குப் பின், திருச்சி சிவா பெயரை, ராகுல் நீக்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. லண்டன் மாநாட்டை தவிர, கேம்பிரிட்ஜ் பல்கலையில், வரும் 23ல், 'இந்தியா - 75' என்ற தலைப்பில் ராகுல் பேசுகிறார்.

- புதுடில்லி நிருபர் -



Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27-மே-202216:10:09 IST Report Abuse
J.V. Iyer அடுத்த பிரிட்டன் தேர்தலில் இவர்கள் நிற்பதாக எண்ணம்போலும்
Rate this:
Cancel
Narasimhan - Manama,பஹ்ரைன்
22-மே-202212:28:48 IST Report Abuse
Narasimhan பப்பு பேசுவது பப்புவெக்கே புரியாது. திமுகவை அழைக்காதது நல்லதுதான்.
Rate this:
Cancel
Chinnappa Pothiraj - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-மே-202211:52:46 IST Report Abuse
Chinnappa Pothiraj நீதி அனைவருக்கும் சமமாக வழங்கவேண்டும். பொறுப்புள்ள தலைவர்கள் பொறுப்புள்ள, நேர்மையுள்ளவர்களை தன்னகத்தே வைத்து செயல்படுத்த வேண்டும். அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும். பல அனுபவமிக்க தலைவர்கள் இருந்தும் சரியான வழிகாட்டுதல் இல்லாமல் ,சுயநலத்தினாலோ என்னவோ சக இலங்கைத் தமிழர்களை இழந்தோம், அத்துடன் நம் பாரதப்பிரதமர் திரு இராஜிவ் காந்தியையும் இழந்தோம்(யாருடைய பின்புலமோ தெரியவில்லை). இந்த நிகழ்வு வரலாற்றின் கரும்புள்ளி. இலங்கைத்தமிழர்களுக்கு சம வாய்ப்பு வழங்கமறுத்த இலங்கை அரசியல்வாதிகள் தமிழர்களை அழித்து சீனாவுடன் உறவு கொண்டாடி அதல பாதாளத்திற்கு கொண்டு சென்ற அரசியல்வாதிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X