ஞபாக சக்தி வலுப்பெற...
தினமும் உணவில் 100 கிராம் அளவு 'கிரான்பெரிஸ்' (குருதிநெல்லி) பழங்கள் எடுத்துக்கொண்டால் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கி ஞாபக சக்தியை அதிகரிக்க செய்கிறது என ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ரத்தத்தில் உள்ள 'எல்.டி.எல்.,' எனும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதால் டிமென்ஷியா எனும் மனச்சோர்வு பிரச்னையால் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. இதில் 87 சதவீதம் நீர்ச்சத்து உள்ளதால் சிறுநீரக தொற்று பாதிப்பு ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இதில் வைட்டமின் சி, இ, கே1 சத்துக்கள் உள்ளன.
தகவல் சுரங்கம்
தேயிலை தினம்
உலகில் தண்ணீருக்கு அடுத்து பெரும்பாலானோர் அருந்தும் பானமாக தேநீர் எனும் 'டீ' உள்ளது. தேயிலையில் தயாரிக்கப்படும் தேநீர் உடலுக்கு நல்லது என ஆய்வுகள் தெரிவித்துள்ளன. உலகில் தேயிலையின் உற்பத்தியை அதிகரிக்க வலியுறுத்தி ஐ.நா., சார்பில் மே 21ல் சர்வதேச தேயிலை தினம் கடைபிடிக்கப்படுகிறது. உலகின் தேயிலை உற்பத்தியில் சீனா, இந்தியா முதலிரண்டு இடங்களில் உள்ளது.
* முன்னாள் பிரதமர் ராஜிவ் படுகொலை செய்யப்பட்ட தினமான மே 21, ஆண்டுதோறும் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.