கல்குவாரி விபத்து வழக்கு: காங்.,பிரமுகர், மகன் கைது

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 4 பேர் பலியான சம்பவத்தில் தேடப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் 75, அவரது மகன் குமார் 40, ஆகியோர் நேற்று மங்களூரு ஓட்டலில் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் தமிழக காங்., துணைத்தலைவர் சேம்பர் செல்வராஜ், மகன் குமார் ஆகியோர் 'வெங்கடேஸ்வரா கிரஷர் 'என்ற குவாரி நடத்தி


திருநெல்வேலி : திருநெல்வேலி அருகே கல்குவாரியில் பாறை சரிந்து 4 பேர் பலியான சம்பவத்தில் தேடப்பட்ட காங்கிரஸ் பிரமுகர் சேம்பர் செல்வராஜ் 75, அவரது மகன் குமார் 40, ஆகியோர் நேற்று மங்களூரு ஓட்டலில் கைது செய்யப்பட்டனர்.திருநெல்வேலி மாவட்டம் அடைமிதிப்பான்குளத்தில் தமிழக காங்., துணைத்தலைவர் சேம்பர் செல்வராஜ், மகன் குமார் ஆகியோர் 'வெங்கடேஸ்வரா கிரஷர் 'என்ற குவாரி நடத்தி வந்தனர்.latest tamil news2018 முதல் 2023 வரை குவாரி நடத்த அனுமதி பெற்றிருந்தனர். 5 ஆண்டுகளில் எடுக்கவேண்டிய கனிமத்தை முன்னதாக எடுத்துவிட்டதால் தொடர்ந்து குவாரி செயல்பட அரசு அனுமதி மறுத்தது. இருப்பினும் சட்டவிரோதமாக இரவில் குவாரியில் பாறைகளை உடைத்து எடுத்தனர். மே 14 இரவில் பாறை உடைத்தபோது பாறைச் சரிவு ஏற்பட்டதில் 6 பேர் சிக்கினர்.

இதில் முருகன், விஜயன் உயிருடன் மீட்கப்பட்டனர். செல்வம், செல்வகுமார், முருகன், ராஜேந்திரன் ஆகிய 4 பேர் இறந்துவிட்டனர். மற்ற மூவரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன. ராஜேந்திரன் உடல் பாறைகளுக்குள் சிக்கியிருப்பதால் நேற்று 6-வது நாளாக தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். பாறைகளை உடைத்து அகற்றிவிட்டு உடலை மீட்க முடிவு செய்தனர். பாறைகளில் 32 துளையிட்டு வெடிமருந்து வைத்து வெடிக்கச் செய்தனர். உடைந்த பாறைகளை அப்புறப்படுத்தும் பணி நடந்தது. ராஜேந்திரன் உடலை மீட்பதில் சிரமம் நீடிக்கிறது.


latest tamil newsதந்தை, மகன் கைதுகல்குவாரியில் 4 பேர் இறந்த சம்பவத்தில் உரிமையாளர்,மகன், குத்தகைதாரர் சங்கரநாராயணன், மேஸ்திரி ஜெபசிங் ஆகிய 4 பேர் மீது முன்னீர் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் கைதான சங்கரநாராயணன் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெபசிங் சிறையில் அடைக்கப்பட்டார். உரிமையாளர், மகன் தலைமறைவாகி விட்டனர். இருவரும் கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஓட்டலில் தங்கியிருப்பதை அறிந்த திருநெல்வேலி தனிப்படையினர் அங்கு சென்று கைது செய்தனர்.

தென்மண்டல ஐ.ஜி., அஸ்ரா கர்க், திருநெல்வேலி எஸ்.பி.சரவணன் கூறுகையில், ''குவாரி வழக்கில் உரிமையாளர் செல்வராஜ், மகன் குமாரை தேடி வந்தோம். அவர்கள் தலைமறைவானதால் அவர்களின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அவர்களது வீடுகள், நிறுவனங்களில் ஆவணங்கள் தேடி சோதனை நடந்தது. சொத்துக்களை முடக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னீர் பள்ளம் இன்ஸ்பெக்டர் தில்லை நாகராஜன், எஸ்.ஐ., சிவசங்கர் குழுவினர் இருவரையும் மங்களூருவில் ஓட்டலில் கைது செய்தனர். அவர்கள் நாளை (இன்று) திருநெல்வேலி கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுவார்கள்,''என்றனர்.போலீசாருக்கு எதிர்ப்பு
காங்., பிரமுகர் சேம்பர் செல்வராஜின் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை. அங்கு நேற்று முன்தினம் நாங்குநேரி உதவி எஸ்.பி. ரஜத் சதுர்வேதி தலைமையில் போலீசார் ஆவணங்களை தேடிச் சென்றனர். அவரது உறவினர்கள் போலீசார் சோதனை மேற்கொள்ள விடாமல் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்றும் அங்கு போலீசார் சோதனை மேற்கொள்ளவில்லை.


உடல்கள் வாங்க மறுப்புபாறைச்சரிவில் இறந்த முருகன், செல்வம்,செல்வகுமார் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. இறந்தவர்களுக்கு தலா ரூ. 15 லட்சம் நிவாரண நிதி அரசுஅறிவித்துள்ளது. இந்நிலையில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்களின் உடல்களை பெற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்து விட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karuthu kirukkan - Chennai,சிங்கப்பூர்
21-மே-202212:52:58 IST Report Abuse
Karuthu kirukkan அனுமதியின்றி கனிம வளத்தை களவு செய்ததுடன் , விலை மதிப்பில்லா 4ஏழை தொழிலார்களை காவு வாங்கி விட்டார்கள் .....
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-மே-202208:46:35 IST Report Abuse
duruvasar எல்லாம் ஒன்னுக்குள்ள ஒன்னு ஆயிட்டு. பொறவு என்னலே .போலீஸ்சு வாய்தான்னு. அய்யாவுடுங்க. அதனாலத்தான் தொகுதி எம்பிக்கூட அங்குடடு வந்தாங்களளா. இல்லேனா இந்நேரம் பொங்கியிருப்பாங்கல்ல.
Rate this:
Cancel
vadivelu - thenkaasi,இந்தியா
21-மே-202208:26:59 IST Report Abuse
vadivelu இவர்கள் குற்றமற்றவர்கள் என்று தீர்மானிக்க படுவார்கள், அவர்கள் சார்ந்தது அப்படி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X