மகளை கொன்ற இந்திராணிக்கு 6 ஆண்டுக்கு பின் 'ஜாமின்'

Added : மே 21, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
மும்பை : மகளை கொன்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் 'ஜாமின்' வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்.தனியார் 'டிவி' உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியும், ஐ.என்.எக்ஸ்., 'மீடியா'வின் உரிமையாளருமான இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் 2015ல் கைது
மகளை கொன்ற இந்திராணிக்கு   6 ஆண்டுக்கு பின் 'ஜாமின்'


மும்பை : மகளை கொன்ற வழக்கில், உச்ச நீதிமன்றம் 'ஜாமின்' வழங்கியதையடுத்து, ஆறு ஆண்டுக்குப்பின், சிறையிலிருந்து இந்திராணி முகர்ஜி விடுவிக்கப்பட்டார்.தனியார் 'டிவி' உரிமையாளர் பீட்டர் முகர்ஜியின் இரண்டாவது மனைவியும், ஐ.என்.எக்ஸ்., 'மீடியா'வின் உரிமையாளருமான இந்திராணி முகர்ஜி, தன் மகள் ஷீனா போராவின் கழுத்தை நெரித்து கொலை செய்த குற்றச்சாட்டில் 2015ல் கைது செய்யப்பட்டார்.

இதற்கு உடந்தையாக இருந்த பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டார். கடந்த 2020ல், பீட்டருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஆனால், இந்திராணியின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு வந்த நிலையில், அவருக்கு உச்ச நீதிமன்றம்௧௮ம் தேதி ஜாமின் வழங்கியது.இதையடுத்து, மஹாராஷ்டிரா மாநிலம் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டிருந்த இந்திராணி, ஆறு ஆண்டுக்கு பின் நேற்று விடுவிக்கப்பட்டார்.''சிறையிலிருந்து வெளியே வந்தது மகிழ்ச்சியளிக்கிறது,'' என, இந்திராணி கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
abdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா
21-மே-202213:10:49 IST Report Abuse
abdulrahim நாட்டின் பிரதமரையும் அவரோடு சேர்த்து ஏராளமான நபர்களையும் கொன்றும் இன்னும் பலரை நிரந்தர ஊனமாக்கிய கொலைகாரனை விடுதலையே செய்து விட்டார்கள் அப்புறம் இதென்ன ஆச்சர்யம்
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
21-மே-202206:56:41 IST Report Abuse
duruvasar பத்து வருடங்களுக்கு மேல் சிறையிலிருந்தால் நிரபராதி என அழைக்கவேண்டும் என்பதுதான் திரவிடியன் மாடலிஇல் கூறப்பட்டுள்ளது..
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
21-மே-202205:44:04 IST Report Abuse
Fastrack ..குற்றம் நிரூபணம் ஆகவில்லை ..தீர்ப்பு வராமலேயே எப்படி முடிவு செய்யலாம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X