செய்திகள் சில வரிகளில்...

Added : மே 21, 2022 | |
Advertisement
சமூகத்தை சீர்குலைக்கும் சம்பவம்பெங்களூரு: ஆனேக்கல் அல்லயன்ஸ் பல்கலைக்கழகத்தின் இலக்கிய திருவிழாவில், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பங்கேற்று பேசினார். தற்காலிக அரசியல் லாபத்துக்காக, உண்மையான பிரச்னைகளை மறைத்து விட்டு, சமூகத்தை சீர்குலைக்கும் சம்பவங்களை நடத்துவது அபாயகரமானது. வெட்ககேடானது என்றார்.சித்துவுக்கு காலணி அணிவித்த தொண்டர்ராய்ச்சூர்:
செய்திகள் சில வரிகளில்...

சமூகத்தை சீர்குலைக்கும் சம்பவம்

பெங்களூரு: ஆனேக்கல் அல்லயன்ஸ் பல்கலைக்கழகத்தின் இலக்கிய திருவிழாவில், கேரளாவை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் பங்கேற்று பேசினார். தற்காலிக அரசியல் லாபத்துக்காக, உண்மையான பிரச்னைகளை மறைத்து விட்டு, சமூகத்தை சீர்குலைக்கும் சம்பவங்களை நடத்துவது அபாயகரமானது. வெட்ககேடானது என்றார்.

சித்துவுக்கு காலணி அணிவித்த தொண்டர்
ராய்ச்சூர்: ராய்ச்சூர் மாவட்டம், தேவதுர்கா தாலுகா, கப்பூரில் நடந்த இலவச கூட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று சென்றார். அங்குள்ள பூதிபசவேஸ்வரா மடத்துக்கு சென்று தரிசனம் செய்தார். பின் வெளியே வந்த போது, காங்கிரஸ் தொண்டர் ஒருவர், அவருக்கு 'ஷூ' அணிவித்தார். இந்த படம் சமூக வலை தளத்தில் பரவி வருவதால், சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

28ல் ஹுப்பள்ளி மேயர் தேர்தல்
ஹுப்பள்ளி: ஹுப்பள்ளி - தார்வாட் மாநகராட்சி மேயர், துணை மேயர் பதவிக்கான தேர்தல், வரும் 28ல் நடக்கிறது. அன்றைய தினம் காலை 10:00 மணியிலிருந்து, பிற்பகல் 1:00 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யப்படும். மதியம் 3:00 மணிக்கு தேர்தல் நடக்கிறது.

சிக்கபல்லாபூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை
சிக்கபல்லாபூர்: மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலை வாய்ப்பு துறை அமைச்சர் பூபேந்திரசிங் யாதவை, மாநில சுகாதார துறை அமைச்சர் சுதாகர் நேற்று டில்லியில் சந்தித்து பேசினார். அப்போது, சிக்கபல்லாபூரில் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அமைக்கும்படி வலியுறுத்தினார். மத்திய அமைச்சரும் அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து உடனடியாக உயர்மட்ட ஆலோசனை நடத்தி ஒப்புதல் வழங்கினார்.

ரயில்வே அமைச்சர் ஆய்வு
பெங்களூரு: ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், நேற்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, சிறப்பு ரயில் மூலம், பெங்களூரு கண்டோன்மென்ட் ரயில் நிலையம் வந்தார். அந்த வழித்தடத்தை ஆய்வு செய்து, புதிய திட்டங்கள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ஐந்து நாள் 'பாஸ்' அறிமுகம்
பெங்களூரு: சில நாட்களுக்கு முன் பெங்களூரு மெட்ரோ ரயிலில் ஒரு நாள், மூன்று நாள் பாஸ் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரும் 23 முதல் ஐந்து நாள் பாஸ் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு 550 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ.25 ஆயிரம் உதவித்தொகை
பெங்களூரு: கர்நாடகாவின் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. இதில் பெங்களூரில் அதிக மதிப்பெண் பெற்ற 144 மாணவர்களுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பஸ் மீது விழுந்த மின் கம்பி
சிக்கமகளூரு: சிக்கமகளூரின் மூடிகரே அருகே உள்ள குதுரேகுன்டி என்ற இடத்தில் நேற்று அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் திடீரென மின் கம்பம் சாய்ந்ததில் மின் கம்பிகள் பஸ்சின் மீது விழுந்தது. அந்த நேரத்ததில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததால் பெரிய அளவிலான அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. பயணியர் உயிர் தப்பினர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X