ஆஞ்சநேயர் கோவில் சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்

Added : மே 21, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
சென்னை,--நங்கநல்லுார், ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம், நேற்று மிக விமர்சையாக நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.சென்னை, நங்கநல்லுார், ராம்நகரில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த, 1995ம் ஆண்டு அஷ்டபந்த மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.இக்கோவிலில்
ஆஞ்சநேயர் கோவில் சம்ப்ரோக்ஷணம் கோலாகலம்

சென்னை,--நங்கநல்லுார், ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் ஜீர்ணோதாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம், நேற்று மிக விமர்சையாக நடந்தது.

இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.சென்னை, நங்கநல்லுார், ராம்நகரில் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர் கோவில் அமைந்து உள்ளது. இக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு, கடந்த, 1995ம் ஆண்டு அஷ்டபந்த மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.இக்கோவிலில் கோதண்டராமர், வேணுகோபால சுவாமிகளுக்கு தனி சன்னதிகள் உள்ளன. கடந்த, 2007ம் ஆண்டு சம்ப்ரோக்ஷணம் நடந்தது.

அதன் பிறகு, மகா சம்ப்ரோக்ஷணம் நேற்று நடந்தது.அதற்காக, மூலஸ்தான பாலாலயம் கடந்த மாதம், 25ம் தேதி நடந்தது. சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு, 16ம் தேதி யாக சாலை வளர்க்கப்பட்டு ஹோமங்கள் நடந்தன. 17ல் மருந்து சார்த்தும் வைபவம் நடந்தது.சம்ப்ரோக்ஷண நாளான நேற்று காலை, 5:00 மணி முதல் சுப்ரபாதம், விஸ்வரூபம், புண்யாஹவாசனம், காலசந்தி, திருவாராதனம், பிரதான ஹோமம், மகாபூர்ணாஹுதி ஆகி யவை நடந்தன. ராஜம், வெங்கடேச பட்டாச்சாரியார் தலைமையில், கோவில் பட்டாச்சாரியார் பார்த்தசாரதி முன்னிலையில் சம்ப்ரோக்ஷணம் நடந்தது.

நேற்று காலை, 8:00 மணிக்கு வஸ்திராGதானம், கடப்புறப்பாடு நடந்தது. பின், கோபுர கலசங்களுக்கு கும்ப நீர் சேர்க்கப்பட்டு, ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா சம்ப்ரோக்ஷணம் நடந்தது.இந்நிகழ்ச்சியில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் அன்பரசன், அறநிலையத்துறை கமிஷனர் குமரகுருபரன், இணைக் கமிஷனர் ரேணுகாதேவி, அறங்காவலர் ரமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இதில், கோவிலை சுற்றி உள்ள வீதிகளிலும், அடுக்கு மாடி குடியிருப்பிலும் நின்று ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர். அதைத் தொடர்ந்து, விசேஷ திருவாராதனம், வேத விண்ணப்பம், பிரம்மகோஷம், சாற்று மறை, தீபாராதனை நடந்தது. இன்று முதல், 45 நாட்களுக்கு மண்டலாபிஷேகம் நடக்கிறது.


பக்தர்கள்

சம்ப்ரோக்ஷணத்தை முன்னிட்டு தரிசிக்க வந்த ஏராளமான பக்தர்கள், மூலவர் ஆஞ்ச நேயரை மொபைல் போனில் படம் எடுத்தனர். சிலர் கேமராக்களிலும் எடுத்தனர். வீடியோக்களும் எடுக்கப்பட்டன. கோவில் நிர்வாகம் இதனை தடுக்கவில்லை.Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
21-மே-202211:58:48 IST Report Abuse
M  Ramachandran வக்கீல் பட்டத்துடன் லோக்கல் மிரட்டல் விடும்தலைவர் கலந்து கொள்ளா வில்லையா?
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
21-மே-202211:56:27 IST Report Abuse
M  Ramachandran yeaan
Rate this:
Cancel
Sidhaarth - SENGOTTAI ,இந்தியா
21-மே-202211:29:43 IST Report Abuse
Sidhaarth ஸம்ப்ரோக்ஷணமா?அப்படின்னா? ஆக இது தமிழர்களுக்கு தேவை இல்லாதது நன்றி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X