இன்றைய கிரமை் ரவுண்ட் அப்: தந்தையை துண்டு துண்டாக வெட்டி கொன்ற மகன்

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை, :ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை சென்னையில் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை காவேரிப்பாக்கத்தில் புதைத்த மகனை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன், 80. இவர், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரின்மனைவி இறந்து விட்டார். ரத்தக்கறை இவருக்கு, காஞ்சனா மாலா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்கள்
 இன்றைய கிரமை் ரவுண்ட் அப்: தந்தை  துண்டு துண்டாக வெட்டி கொன்ற மகன்


சென்னை, :ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியரை சென்னையில் கொலை செய்து, துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை காவேரிப்பாக்கத்தில் புதைத்த மகனை, போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையை சேர்ந்தவர் குமரேசன், 80. இவர், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். இவரின்மனைவி இறந்து விட்டார்.


ரத்தக்கறைlatest tamil news
இவருக்கு, காஞ்சனா மாலா, யமுனா, பரிமளா ஆகிய மூன்று மகள்கள் உள்ளனர். மகன் குணசேகரன், 47. அனைவருக்கும் திருமணமாகி விட்டது. வளசரவாக்கத்தில் உள்ள வீட்டின் கீழ் தளத்தில் மகன் குணசேகரன் குடும்பத்தினரும், மேல் தளத்தில் கும
ரேசனும் வசித்து வந்தனர்.மூத்த மகள் காஞ்சனாமாலா, தன் கணவர் இறந்து விட்டதால், தந்தை குமரேசனுக்கு உதவியாக அவருடன் வசித்தார். கடந்த 15ம் தேதி காஞ்சனா மாலா, மந்தைவெளியில் உள்ள மாமியாரின் வீட்டிற்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை வளசரவாக்கம் திரும்பினார்.

வீடு பூட்டியிருந்தது. பல்வேறு இடங்களில் தேடியும் குமரேசன் கிடைக்கவில்லை. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர் உதவியுடன், வீட்டின் கதவை உடைத்து, காஞ்சனா மாலா உள்ளே சென்றார். அங்கு வீடு முழுதும் ரத்தக்கறை இருந்தது. அதிர்ச்சியடைந்த காஞ்சனா மாலா, உடனடியாக வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார், சம்பவம் இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.


பிணவாடைஅங்கிருந்த 'சிசிடிவி' கேமராவை ஆய்வு செய்ததில், மேல்தளத்திலிருந்து ஒரு 'டிரம்'மை துாக்கிக் கொண்டு கீழே வந்த குணசேகரன், அதை ஒரு ஆட்டோவில் ஏற்றிச் சென்றது தெரியவந்தது.இவ்வழக்கை விசாரிக்க தனிப்படை அமைக்கப்
பட்டது. தனிப்படை போலீசாரின் விசாரணை யில் குமரேசனை, அவரின் மகன் குணசேகரன் வெட்டிக் கொன்றது தெரியவந்தது. பின்னர், உடலை துண்டு துண்டாக வெட்டி, தண்ணீர் பீப்பாயில் போட்டு வைத்து
உள்ளார். பிணவாடை வரக்கூடாது என, உப்புக்கற்களை பீப்பாயில் கொட்டியுள்ளார். பீப்பாயுடன், ராணிப்பேட்டை அடுத்த காவேரிப்பாக்கம் சென்றுள்ளார்.
குணசேகரன் மனைவி வசந்தியிடம் நடத்திய விசாரணையில், கடந்த 18ம் தேதி தன் கணவர் காவேரிப்பாக்கத்தில் வெங்கடேசன் என்பவரை பார்க்க சென்றதாக
கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து, தனிப்படை போலீசார், காவேரிப்பாக்கம் விரைந்தனர். வெங்கடேசனிடம் நடத்திய விசாரணையில், குமரேசனின் உடலை டிரம்முடன் விவசாய நிலத்தில் புதைத்தது தெரியவந்தது.இது குறித்து போலீசார் தரப்பில் கூறியதாவது:வெங்கடேசனிடம் தனக்கு உடனடியாக வாடகைக்கு ஒரு வீடு, விவசாயம் செய்ய நிலம் வேண்டும் என்று குணசேகரன் கேட்டுள்ளார்.
கோட்டைச்சேரி என்ற பகுதியில் ஒரு காலி வீட்டு மனையை வெங்கடேசன் காண்பித்துள்ளார். முன்பணமாக, 25 ஆயிரம் ரூபாயை குணசேகரன் கொடுத்துள்ளார்.


தலைமறைவுநேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு மினி வேனில், டிரம் மற்றும் மண் வெட்டிகளுடன் குணசேகரன் வந்துள்ளார். வெங்கடேசனை அழைத்து, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டதாகவும், ஒரு மந்திரவாதி உதவியோடு சூனியத்தை எடுத்து டிரம்மில் அடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். புதிதாக வாங்கும் இடத்தில் அதை புதைக்கும்படி மந்திரவாதி கூறியதாகவும் தெரிவித்துள்ளார். இதை நம்பிய
வெங்கடேசன், ஆடு மேய்க்கும் பெருமாளையும் துணைக்கு அழைத்து, பள்ளம் தோண்ட உதவியுள்ளார். பள்ளத்தில் டிரம்மை போட்டு மூடிய பின், குணசேகரன் அங்கிருந்து சென்றுவிட்டார். டிரம்மில் இருந்து துர்நாற்றம் வீசியதாக, விசாரணையின் போது வெங்கடேசன்
தெரிவித்துள்ளார்.தற்போது வருவாய்த்துறையினர் உதவியுடன் டிரம்மை தோண்டியெடுக்க ஆயத்த பணி நடந்து வருகிறது. தலை
மறைவான குணசேகரனை தேடி வருகிறோம்.இவ்வாறு போலீசார் கூறினர்.


கொலை ஏன்?கொலை செய்யப்பட்ட குமரேசனுக்கு சொந்த வீடுகள், சொத்துக்கள் நிறைய உள்ளன. வளசரவாக்கத்தில் குமரேசனுக்கு சொந்தமான வீடுகளில் இருந்து, மாதந்தோறும் வாடகையாக இரண்டரை லட்சம் ரூபாய் வந்துள்ளது.
இந்த வாடகை பணத்தையும், தன் ஓய்வூதிய பணத்தையும், தன் மூன்று மகள்களுக்கு மாதாமாதம் சரி சமமாக பிரித்து கொடுத்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த குணசேகரன், சொத்தை பிரித்து கொடுக்கும்படி தகராறு செய்துள்ளார். அதற்கு குமரேசன் சம்மதிக்கவில்லை. சம்பவத்தன்று இப்பிரச்னையால் ஏற்பட்ட
தகராறில், தன் தந்தையை குணசேகரன் அடித்துக் கொன்றுள்ளார்.

**********


2 மகள்கள் அடித்து கொலை: 'குடி'கார தந்தையின் வெறிச்செயல்


ஸ்ரீபெரும்புதுார்,:ஒரகடம் அருகே குடி போதையில், தன் இரண்டு மகள்களையும் கட்டையால் அடித்துக் கொலை செய்த தந்தையை, போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஒரகடம் அருகே உள்ள சின்னமதுரபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், 40; கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா, 30; வாலாஜாபாத் அருகே தனியார் தொழிற்சாலையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார்.


தகராறுதம்பதிக்கு நந்தினி, 16, நதியா, 14, தீபா, 10, ஆகிய மூன்று மகள்கள் மற்றும் தீனா, 9, என்ற மகன் உள்ளனர். இவர்கள், வாலாஜாபாத் அரசு பள்ளியில் படித்து வந்தனர். நந்தினி பிளஸ் 1 வகுப்பும், தீபா நான்காம் வகுப்பும் படித்து வந்தனர்.
மதுப்பழக்கம் கொண்ட கோவிந்தராஜ், வேலைக்கு செல்லாமல் தினமும் மது அருந்தி வந்துள்ளார். இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

விசாரணை

இந்நிலையில், இரண்டாவது மகள் நதியா, ஏப்., 5ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து, ஒரகடம் போலீசார் விசாரித்து
வருகின்றனர்.இந்நிலையில், நேற்று காலை கீதா வேலைக்கு சென்றார். இரு மகள்கள், மகன் பள்ளிக்குச் சென்று, மகள்கள் மட்டும் மதியம் வீட்டிற்கு வந்தனர்.
அப்போது, தந்தை கோவிந்தராஜ், வீட்டிற்குள் மது அருந்திக் கொண்டிருந்தார்.

வாக்குவாதம்

இதை பார்த்த மகள்கள், தந்தையிடம், 'ஏன் பகல் நேரத்திலேயே குடித்து, உடம்பை கெடுத்துக் கொள்கிறீர்கள்?' எனக் கேட்டனர். தந்தை - மகள்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த கோவிந்தராஜ், அருகே இருந்த மரக்கட்டையை எடுத்து, இரு மகள்களையும் சரமாரியாக தாக்கினார். இதில், அவர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
தகவல் அறிந்து வீட்டிற்கு வந்த தாய் கீதா மற்றும் தம்பி தீனா இருவரும், உடல்களைப் பார்த்து கதறி அழுதனர். போதை தெளிந்ததும் கோவிந்தராஜ், ஒரகடம் காவல் நிலையத்திற்கு சென்று, நடந்த சம்பவத்தைக் கூறி சரணடைந்தார்.அதிர்ச்சி அடைந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, இரு சிறுமியரின் உடல்களையும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கோவிந்தராஜை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மகள்களை தந்தையே கொலை செய்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

***********

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sivaji - Singapore,சிங்கப்பூர்
21-மே-202219:14:26 IST Report Abuse
Sivaji கவலை வேண்டாம் ... நீதிபதி தூக்கு தண்டனை கொடுப்பர், சில வருடம் கழித்து விடுதல செய்யப்படுவார். நம்ம பேட்டரிவாளன் போல.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-மே-202215:50:45 IST Report Abuse
Darmavan தகப்பனை வெட்டிய மகன்.நாடு நாசமாகி போகிறது உதாரணம் .
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-மே-202212:02:02 IST Report Abuse
Kasimani Baskaran கலியுகத்தில் பிள்ளைகளுக்கு தகப்பன் மீது உள்ள பற்று குறைந்துவருவது ஆபத்தானது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X