நாங்கள் துறவிகள் அல்ல: உச்ச நீதிமன்ற நீதிபதி

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (12) | |
Advertisement
புதுடில்லி,:''நாங்கள் துறவிகள் இல்லை; சில நேரங்களில் பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார்.உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது மூத்த நீதிபதியாக இருக்கும் நாகேஸ்வர ராவ், வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இவர் அடுத்த மாதம் ௭ம் தேதி ஓய்வு
நாங்கள் துறவிகள் அல்ல: சுப்ரீம் கோர்ட் நீதிபதி


புதுடில்லி,:''நாங்கள் துறவிகள் இல்லை; சில நேரங்களில் பணிச்சுமையால் நாங்களும் நெருக்கடிக்கு ஆளாகிறோம்,'' என, உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் கூறினார்.

உச்ச நீதிமன்றத்தில் ஐந்தாவது மூத்த நீதிபதியாக இருக்கும் நாகேஸ்வர ராவ், வழக்கறிஞர்கள் சங்கத்தில் இருந்து உச்ச நீதிமன்றத்துக்கு நேரடியாக நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். இவர் அடுத்த மாதம் ௭ம் தேதி ஓய்வு பெறுகிறார்.


latest tamil news




இதற்கிடையே, உச்ச நீதிமன்றத்துக்கு24ம் தேதி முதல், ஜூலை ௧௦ம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், நீதிபதி நாகேஸ்வர ராவுக்கு, நேற்று தான் கடைசி பணி நாளாக அமைந்தது. இதையொட்டி, உச்ச நீதிமன்றத்தில் அவருக்கு நேற்று பிரிவுபசார விழா நடந்தது.

இதில் நீதிபதி நாகேஸ்வர ராவ் பேசியதாவது: உச்ச நீதிமன்ற நீதிபதியாக, ஆறு ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றியது, மிகவும் சிறப்பாக இருந்தது. அதேநேரத்தில் வழக்கறிஞர் பணி மீதான எனது பற்று, இப்போதும் நீடிக்கிறது. நீதிபதி பணிக்காலத்தில், சக நீதிபதிகளிடமிருந்து நான் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன். நீதிபதிகள் துறவிகள் அல்ல; சில நேரங்களில் பணிச்சுமையால் நீதிபதிகளும் நெருக்கடிக்கு உள்ளாவர். நானும், அது போன்ற சூழ்நிலைகளை சந்தித்து உள்ளேன்.
அந்த சமயத்தில், நான் கோபப்பட்டு பேசியிருக்கலாம். என் வார்த்தைகள் சிலரை புண்படுத்திஇருக்கலாம். அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் பாரபட்சமின்றி தான் நீதி வழங்குகிறோம். ஆனால், அது ஒரு தரப்புக்கு மகிழ்ச்சியையும், மறுதரப்புக்கு வருத்தத்தையும் கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா, சொலிசிட்டர் ஜெனரல் வேணுகோபால் உட்பட பலரும், நாகேஸ்வர ராவை பாராட்டி பேசினர்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
21-மே-202213:14:49 IST Report Abuse
jayvee அதுதான் தெரியுமே ..நீங்கள் சாதாரண மனிதர்கள்தான் . எங்களை போல என்று..
Rate this:
Cancel
suresh kumar - Salmiyah,குவைத்
21-மே-202209:44:13 IST Report Abuse
suresh kumar //நீதிபதிகள் துறவிகள் அல்ல .// அப்படியானால் தீர்ப்புகள் விற்கப்படுகின்றனவா? அல்லது குடும்ப அச்சுறுத்தலின் காரணமாக நீதிக்குப் புறம்பாக எழுதப்படுகின்றனவா? விசாரணைக் கைதிகள் பலபேர் பல ஆண்டுகளாக விசாரணையே இல்லாமல் சிறையில் இருக்கும்போது குற்றம் நிரூபிக்கப்பட்ட தூக்குத்தண்டனைக் கைதி பின்னர் ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டு பின்னர் விடுதலையும் செய்யப்பட்டது இப்படிப்பட்ட ஏதாவது காரணத்தாலா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.
Rate this:
Cancel
21-மே-202208:11:26 IST Report Abuse
Tapas Vyas முதல்ல சாதி மதம் இன சார்பற்ற தன்மைை நீதிபதிகள் கத்துக்கட்டும்-அப்புறம் பார்ப்போம் துறவியாகிறதை பத்தி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X