தென் கொரியா அதிபரை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்:

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
சீயோல்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தென்கொரியா சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் அணு ஆயுதங்கள் , ஏவுகணை சோதனைகளை வடகொரியா சோதித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து
 Biden vows to deepen US-South Korea ties in first Asia stop

சீயோல்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று தென்கொரியா சென்றார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்புகளை பொருட்படுத்தாமலும் அணு ஆயுதங்கள் , ஏவுகணை சோதனைகளை வடகொரியா சோதித்து வருகிறது. இந்த விவகாரத்தில் பிரச்சினைக்கு தீர்வுகாண அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பும், வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னும் 3 முறை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியும் முன்னேற்றம் இல்லை.

தற்போது அமெரிக்க அதிபராக உள்ள ஜோ பைடன் வடகொரியாவுடனான நின்றுபோன பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க தீவிர முனைப்பு காட்டினார். ஆனால் அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கும் விதமாக வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது .


latest tamil news





இந்த நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் முதன்முறையாக இன்று தென்கொரியா சென்றார் ஜோ பைடன். அங்கு அந்நாட்டு அதிபர் யூன் சுக் இயோலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையின் போது வடகொரியாவின் அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை திட்டம் குறித்தும் , அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
21-மே-202209:43:50 IST Report Abuse
தியாகு தென் கொரியா அதிபரை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். ஹி...ஹி...ஹி...ஜப்பான் அதிபர் சுடாலினையும், ஈழ அதிபர் செபாஸ்டியன் சைமனையும் ஜோ பைடன் எப்போது சந்திப்பார்?
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
21-மே-202209:30:58 IST Report Abuse
Tamilan நாட்டை மறந்து விட்டு ஐ நாவின் வேலையை பார்க்கிறார்கள் இவர்கள் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X