திருப்பூர்: நடப்பு நிதியாண்டின் முதல் மாதத்தில், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 24.20 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால், இது உண்மையான வளர்ச்சி அல்ல என்கின்றனர், ஏற்றுமதியாளர்கள்.

நெருக்கடியான இந்த சூழலிலும், நாட்டின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பில் மட்டும் வளர்ச்சி நிலை பெற்றிருக்கிறது. இந்த நிதியாண்டின் (2022----23) முதல் மாதமான, கடந்த ஏப்., மாதம், நாட்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தக மதிப்பு, 12 ஆயிரத்து 2 கோடியே 97 லட்சம் ரூபாயை தொட்டுள்ளது. இந்த வர்த்தகம், கடந்த ஆண்டு ஏப்., மாதம், 9 ஆயிரத்து 664 கோடியே 8 லட்சமாக இருந்தது.
முந்தைய நிதியாண்டை விட, நடப்பு நிதியாண்டின் ஏப்., மாதத்தில், ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 24.20 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளதுதிருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறியதாவது:ஆயத்த ஆடை உற்பத்தி செலவினம் அதிகரித்துள்ளது. இதற்கேற்ப, வர்த்தகர்கள், 40 சதவீதம் வரை விலை உயர்வு வழங்குகின்றனர்.

இதனாலேயே, நாட்டின் ஆடை ஏற்றுமதி அதிகரித்ததுபோல் தெரிகிறது. வெளிநாடுகளில் இருந்து குறைந்த எண்ணிக்கை ஆடை தயாரிப்புக்கான ஆர்டர்கள்தான் வருகின்றன.வர்த்தக மதிப்பு உயர்ந்தபோதும், நாட்டின் ஏற்றுமதி ஆடை எண்ணிக்கை உயரவில்லை.
எனவே, தற்போதைய வர்த்தக மதிப்பை கொண்டு, நாட்டின் ஏற்றுமதி வர்த்தகம் வளர்ச்சி அடைந்துள்ளதாக கருதமுடியாது.வர்த்தக மதிப்பு அடிப்படையில் கணக்கிட்டாலும் கூட, ஏற்றுமதி வர்த்தகம் 40 சதவீதம் வளர்ச்சி அடைந்திருக்க வேண்டும். ஆனால், 24.20 சதவீத அளவே உயர்ந்துள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE