வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மயிலாடுதுறை :தருமபுரம் ஆதீன பட்டினப்பிரவேசம் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம், நேற்று நடைபெற்றது.மயிலாடுதுறை தருமபுரத்தில், 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்த சைவ ஆதீன திருமடத்தில், 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த, ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் கோவில் உள்ளது.இக்கோவிலின் ஆண்டு பெருவிழா மற்றும் ஆதீன குரு முதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை விழா, 11 நாட்கள் நடத்தப்படும்.கடந்த 12ல் விழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி, அம்பாள் வீதியுலா காட்சி நடைபெற்றது. நேற்று திருக்கல்யாண வைபவம், திருத்தேரோட்டம் நடைபெற்றது.

அதிகாலை 5:00 மணிக்கு, சிறப்பு அலங்காரத்தில் ஞானாம்பிகை சமேத ஞானபுரீஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன், இரண்டு திருத்தேரில் எழுந்தருளினர்.ஆதீன திருமடத்தின் கீழவாசலில் துவங்கிய தேரோட்டத்தை, தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர்.
மேலவீதியில் உள்ள ஆதீன மடத்தின் முன், தருமபுரம் ஆதீனம், 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் வழிபாடு நடத்தி, திருத்தேரை வடம் பிடித்து இழுத்தார்.தேர் தருமபுரம் ஆதீன திருமடம் மற்றும் ஞானபுரீஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள நான்கு மாட வீதிகளை வலம் வந்து, மீண்டும் நிலையை அடைந்தது. திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து, தரிசனம் செய்தனர்.பெருவிழாவின் 10ம் நாளான இன்று காலை, தருமபுரம் ஆதீன குருமகா சன்னிதானம் சவாரி பல்லக்கில் எழுந்தருளி, குரு முகூர்த்தத்தில் வழிபாடு மேற்கொள்கிறார்.நாளை, 11ம் நாளில், தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் பல்லக்கில் எழுந்தருள, வீதி உலா வரும் பிரசித்தி பெற்ற பட்டனப்பிரவேசம்நடைபெற உள்ளது. அதற்கு பின், ஞானக்கொலு காட்சியும் நடைபெற உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE