ரயில் போக்குவரத்து: தமிழகத்தை எக்ஸ்பிரஸ் வேகத்தில் முந்தும் கேரளா!

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (57) | |
Advertisement
தமிழகத்தை விட சிறிய மாநிலமாக இருந்தாலும், ரயில் வசதிகளை மேம்படுத்தி, பொது போக்குவரத்தைச் செயல்படுத்துவதில் கேரளா முன்னோடியாக விளங்கி வருகிறது.ரயில் போக்குவரத்து கேரளா மாநிலத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் தமிழகத்தில் பாதியளவே இருந்தாலும் ரயில் போக்குவரத்தில், தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமான வசதிகளைக் கொண்டதாக உள்ளது.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

தமிழகத்தை விட சிறிய மாநிலமாக இருந்தாலும், ரயில் வசதிகளை மேம்படுத்தி, பொது போக்குவரத்தைச் செயல்படுத்துவதில் கேரளா முன்னோடியாக விளங்கி வருகிறது.
ரயில் போக்குவரத்து கேரளா மாநிலத்தின் உயிர்நாடியாக விளங்குகிறது. பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் தமிழகத்தில் பாதியளவே இருந்தாலும் ரயில் போக்குவரத்தில், தமிழகத்தை விட இரண்டு மடங்கு அதிகமான வசதிகளைக் கொண்டதாக உள்ளது. கேரளாவிலிருந்து, இந்தியாவின் மிக முக்கிய நகரங்கள் அனைத்துக்கும் நேரடி ரயில்கள் இயக்கப்படுகின்றன. கேரளாவில், 1047 கி.மீ., துாரத்துக்கு 2087 கி.மீ., நீளமுள்ள ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு 3.96 கி.மீ., அதாவது நான்கு கி.மீ., துாரத்துக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் வீதமாக 202 ரயில்வே ஸ்டேஷன்கள் உள்ளன.



latest tamil news





மிகமிகக் குறைவு

கொச்சியில் இயக்கப்படும் மெட்ரோ ரயிலுக்கு 25 ஸ்டேஷன்கள், 38 வாட்டர் மெட்ரோ என மொத்தம் 265 ரயில்வே ஸ்டேஷன்கள் அங்கு இயங்குகின்றன. ரயில்வே ஸ்டேஷன்களின் அடர்த்தி அடிப்படையில், இது தென் மாநிலங்களில் முதலிடம்; தேசிய அளவில் இரண்டாவது இடம்.கேரளாவை ஒப்பிட்டால், தமிழகத்தில் ரயில்வே ஸ்டேஷன்கள் எண்ணிக்கை மிகமிகக் குறைவு.
கேரளாவை ஒட்டியே அமைந்துள்ள கொங்கு மண்டலத்தின் மேற்கு மாவட்டங்களில் 1497 கி.மீ., துாரத்துக்கு 103 ஸ்டேஷன்கள் மட்டுமே உள்ளன. அதாவது 14.5 கி.மீ., துாரத்துக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷன் உள்ளது. இது இந்தியாவிலேயே மிகக்குறைவான அளவாகும்.தமிழகத்தை ஒப்பிட்டால், கேரளாவில் பஸ் போக்குவரத்து வசதிகள் மிகவும் குறைவு. அதை ரயில் வசதிகள் ஈடு செய்கின்றன. கேரளாவின் ரயில்வே வசதிகளுக்காக, அங்குள்ள எம்.பி.,க்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.



என்ன காரணம்?


கேரளாவை விட இரண்டு மடங்கு எம்.பி.,க்களை உடைய தமிழகம், ரயில் வசதிகளைப் பெறுவதில் தொடர்ந்து பின் தங்கியுள்ளது. இங்குள்ள எம்.பி.,க்களுக்குள் ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும், தொலைநோக்கும், தொடர் முயற்சிகளும் இல்லாததே இதற்குக் காரணம். ரயில்வே திட்டங்களில் மட்டுமின்றி, மெட்ரோ ரயில் போன்ற மக்கள் போக்குவரத்துத் திட்டங்களை செயல்படுத்துவதிலும், கேரளா முன்னோடி மாநிலமாக உள்ளது.

கேரளாவில், கொச்சியில் மெட்ரோ ரயில் திட்டமும், திருவனந்தபுரம், கோழிக்கோடு ஆகிய நகரங்களில் 'லைட் மெட்ரோ' திட்டமும் சிறப்பாக செயல்படுகின்றன.கொச்சி, கோவை இரண்டு நகரங்களையும் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்தத் தகுதியான நகரங்களாக, கடந்த 2011ல் ஒரே நாளில்தான் மத்திய அரசு தேர்வு செய்து, அறிவித்தது. கோவையில் இதற்காக இன்று வரை விரிவான திட்ட அறிக்கை கூட தயாரிக்கப்படவில்லை.


latest tamil news





அக்கறை இல்லை


கேரளாவில் மெட்ரோ திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக, கொங்கன் ரயில்வே கார்ப்பரேஷனின் கீழ் கேரளா மற்றும் கொச்சி ரயில்வே கார்ப்பரேஷன் என இரண்டு நிறுவனங்களை கேரளா அரசு நிறுவியது. அந்த நிறுவனங்களே மெட்ரோ ரயில் திட்டங்களை மிக விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தியுள்ளன.
ஆனால் சென்னையைத் தாண்டி, தமிழகத்தில் வேறு எந்த நகரங்களிலும் மெட்ரோ திட்டத்தைச் செயல்படுத்த, தமிழக அரசு ஒரு பைசா கூட செலவிடவில்லை. தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்யும் தி.மு.க., - அ.தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுக்கும், பொது போக்குவரத்துத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் துளியும் அக்கறையே இல்லை என்பதையே இது வெளிப்படுத்துகிறது.-நமது சிறப்பு நிருபர்-


Advertisement




வாசகர் கருத்து (57)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram - ottawa,கனடா
21-மே-202221:06:49 IST Report Abuse
Ram விடியல் அரசை கேளுங்கள் ... இங்கதான் பஸ் போக்குவரத்து மற்றும் பஸ் சார்ஜ் அதிகமாயிருக்கே
Rate this:
Cancel
தமிழன் - சென்னை,இந்தியா
21-மே-202219:35:37 IST Report Abuse
தமிழன் எம் பி க்கள் தான் காரணம் எனில் கர்நாடக மாநிலம் ஏன் கேரளாவை விட பின்தங்கி உள்ளது? அங்கு பி ஜெ பி அரசு தான் பல ஆண்டுகளாக உள்ளதே? கேரளா முன்னேறியதற்கு காரணம் மத்திய பணியில் உள்ள கேரளா அதிகாரிகள் பல தில்லு முள்ளு வேலைகளை செய்து கேரளாவிற்கு அதிக நிதி கிடைக்கும் படி செய்தது. அதில் ஒன்று கோவையை பாலக்காடு கோட்டத்துடன் இணைத்தது. இணைத்த பின் கூட கோவையில் ரயிலை நிறுத்தாமல் போத்தனூரில் நிறுத்தி கோவை மாநகர பயணிகளின் சீட் எண்ணிக்கையைக் குறைப்பது (கோவையில் ரயில் நின்றால், மாநகராட்சி எனில் அதிக சீட் ஒதுக்க வேண்டும்), இது போல இன்னும் பல. ரயில் விஷயத்தில் 1900-களுக்கு பின் தான் தமிழகம் விழித்துக் கொண்டது.
Rate this:
Cancel
Vijay D Ratnam - Chennai,இந்தியா
21-மே-202218:23:49 IST Report Abuse
Vijay D Ratnam ஹிந்தி தெரியாது போடா என்று நாம் பினாத்திக்கொண்டு இருக்கிறோம். ஆனால் கேரளா லாபி ரயில்வே டிபார்ட்மெண்டில் பிரசித்தம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X