தோண்ட தோண்ட பிளாஸ்டிக் கழிவுகள்: சுற்றுச்சூழல் சீர்கேட்டுக்கு ஒரு உதாரணம்

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
திருப்பூர்: உயர்மட்ட பாலம் பணிக்கு துாண் அமைக்க குழிதோண்டிய போது, டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்குள் இருந்து பொக்லைன் மூலம் அள்ளப்பட்டு வருகிறது.திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின் ரோட்டை இணைக்க உயர்மட்ட பாலம், 1.5 கி.மீ., துாரத்துக்கு கட்டும் பணி, 2011ல் துவங்கியது. வழக்குகள், நடைமுறை சிக்கல்கள் காரணமாக, பத்து ஆண்டாக நடந்து பணி முடியவில்லை.நீண்ட

திருப்பூர்: உயர்மட்ட பாலம் பணிக்கு துாண் அமைக்க குழிதோண்டிய போது, டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்குள் இருந்து பொக்லைன் மூலம் அள்ளப்பட்டு வருகிறது.

திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கொங்கு மெயின் ரோட்டை இணைக்க உயர்மட்ட பாலம், 1.5 கி.மீ., துாரத்துக்கு கட்டும் பணி, 2011ல் துவங்கியது. வழக்குகள், நடைமுறை சிக்கல்கள் காரணமாக, பத்து ஆண்டாக நடந்து பணி முடியவில்லை.நீண்ட இழுபறிக்கு பின் கோப்புகளை துாசு தட்டிய நெடுஞ்சாலைத்துறையினர், மீண்டும் பணிகளை துவக்கியுள்ளனர். கடந்த வாரம் மேயர், எம்.எல்.ஏ., ஆய்வு நடத்தி பணிகளை துரிதப்படுத்த அறிவுறுத்தினர்.



latest tamil news





கழிவு சங்கமம்...



பாலத்தின் மீதமுள்ள துாண்களை பதிக்க ஏதுவாக, ராட்சத பொக்லைன் இயந்திரம் மூலம், 15 முதல், 35 அடிக்கு குழி தோண்டும் பணி துவங்கியுள்ளது. வழக்கமாக குழி தோண்டும் போது ஈரமண், கிணற்று மண், பாறையின் உடைந்த துகள்கள் வருவது வழக்கம்.

ஆனால், இப்பகுதியில் கருப்பு நிற மண் மட்டுமே பத்தடி, 15 அடி கடந்த பின்பும், பிளாஸ்டிக் கழிவுகளுடன் வந்து கொண்டிருக்கிறது.
அப்பகுதி மக்கள் கூறுகையில், ''பாலம் நிறைவு பெறும் சூர்யா காலனி மேற்கு பகுதியில், 100 அடி பாறைக்குழி பல ஆண்டுகளாக இருந்தது. 2013ல் மாநகராட்சி குப்பை கொட்ட இடமில்லாததால், பாறைக்குழியில் மூன்று ஆண்டுகள் குப்பை கொட்டப்பட்டது.பாறைக்குழி நிறைந்து சமமான தளமாக இடம் மாறி விட்டது. பாறைக்குழி இருந்த இடத்தில் தற்போது பொக்லைன் மூலம் குழிதோண்டுவதால் நாம் பயன்படுத்திய பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணுக்குள் இருந்து வெளியே வருகிறது'' என்றனர்.

'

பிளாஸ்டிக் மண்ணுக்கு எதிரி


பிளாஸ்டிக் தவிர்ப்போம்' என்ற விழிப்புணர்வு, உறுதிமொழியெல்லாம் ஒருபுறம் இருந்தாலும், காலம்காலமாக நாம் பிளாஸ்டிக்கை அதிகமாக பயன்படுத்தி வருகிறோம்; அவை மக்குவதில்லை. மண்ணுக்கு எதிரியாகி வருகின்றன என்பதற்கு, மண்ணுக்குள் இருந்தே வெளியே எடுத்து எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகளே சாட்சி.



Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
21-மே-202210:59:27 IST Report Abuse
duruvasar உலகதர வரிசையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்யும் மருத்துவமனை நிறுவ மாசு அய்யா முயற்ச்சிக்கலாம்..
Rate this:
Cancel
Tamilan - NA,இந்தியா
21-மே-202209:32:31 IST Report Abuse
Tamilan பிளாஸ்டிக் கம்பனிகள் அனைத்தையும் இழுத்து மூட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X