மதுரை நகரில் குண்டர் சட்டத்தில் 24 பேர் கைது

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (10) | |
Advertisement
மதுரை : மதுரை நகரில் குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் இந்தாண்டில் இதுவரை 439 பேரிடம் போலீசார் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். உறுதிமொழிபடி நடக்காத 58 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.நகரில் 25 குழுக்களாக ரவுடிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் 700 பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும்

மதுரை : மதுரை நகரில் குற்றங்களை தடுக்கவும், சட்டம் ஒழுங்கை காக்கவும் இந்தாண்டில் இதுவரை 439 பேரிடம் போலீசார் நன்னடத்தை உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கியுள்ளனர். உறுதிமொழிபடி நடக்காத 58 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். 24 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



latest tamil news




நகரில் 25 குழுக்களாக ரவுடிகள் செயல்பட்டு வருகின்றனர். இதில் 700 பேர் வரை நேரடியாகவும், மறைமுகமாகவும் உள்ளனர். கடந்தாண்டு 450 ரவுடிகள் கைது செய்யப்பட்ட நிலையில் மற்றவர்களை கைது செய்யும் பணி தொடர்ந்து நடக்கிறது. அப்படி கைதானவர்கள் பலர் ஜாமினில் வெளியே வந்து மீண்டும் குற்றங்களில் ஈடுபடுகின்றனர்.

இதை கட்டுப்படுத்த அவர்களிடம் நன்னடத்தை உறுதிமொழி பத்திரங்களை போலீசார் எழுதி வாங்குகின்றனர். உறுதிமொழிபடி நடக்காதவர்கள் எவ்வித விசாரணையுமின்றி சிறையில் அடைக்கப்படுவது இதன் சிறப்பு. கடந்தாண்டு 70 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.இந்தாண்டு குற்றவிசாரணை முறை சட்டப்பிரிவு 109ன் கீழ் 106 பேரிடம் உறுதிமொழி பத்திரம் எழுதி வாங்கப்பட்டது. இதை மீறிய 6 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். அதேபோல் 110 பிரிவின்கீழ் 333 பேரிடம் பத்திரம் வாங்கப்பட்டது. மீறிய 52 பேர் சிறையில் உள்ளனர்.


latest tamil news




நமது நிருபரிடம் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது: குற்றங்களை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தவிர ரவுடிகள் 18 பேர், கஞ்சா வியாபாரிகள் 2 பேர், திருட்டுகளில் தொடர்புடைய 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும், என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
21-மே-202220:12:07 IST Report Abuse
Girija இவர்களின் மீதுள்ள குற்ற பத்திரிகை தககால் செய்ய்யவில்லை என்பதால் இந்த கோர்ட் இவர்கள் மீதுள்ள குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்கிறது . ...... அடுத்த கமிஷனர் ................அடுத்த ட்ராமா ...
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
21-மே-202212:43:43 IST Report Abuse
sankaseshan அண்ணாதுரை பிறந்தநாளில் விடியாத அரசு குண்டர்களை விடுவித்து விடும்
Rate this:
Cancel
21-மே-202212:09:17 IST Report Abuse
SUBBU,MADURAI இந்த செய்தியை படித்தவுடன் எனக்கு சிரிப்புதான் வருகிறது. மதுரை ரௌடிகளைப் பொறுத்த வரை அவிங்களுக்கு நன்னடத்தை, உபதேசம்,உறுதிமொழி நற்சான்றிதழ் பத்திரம் என்றால் என்னவென்று தெரியாது. அவிங்க மொழியில் அவனுக பாஷையில் சொல்லி புரிய வைக்க வேண்டுமென்றால் என்கவுண்டர்தான் ஒரே வழி.அதற்கெல்லாம் இப்போது இருக்கும் சிரிப்பு டிஜிபி உட்பட அவருக்கு கீழ் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் ஒத்து வர மாட்டார்கள். என் தலைவன் ஜாங்கிட் ஒருவர்தான் ரவுடிகளை ஒழிக்க தகுதியானவர்.மதுரை தெப்பக் குளத்தில் கொடூர குற்றவாளியான....என்பவனை (கிட்டத்தட்ட அவனுக்கு கொலை,கொள்ளை உட்பட பதினான்கு கேஸ் ஜாமீனில் வெளிவந்தும் கற்பழிப்பில் ஈடுபட்டவன்)விடியற்காலை ஐந்து மணிக்கு ஜீப்பில் கூட்டி வந்து அவனை இறங்கி ஓடி நடை பயிற்சி எட்றா என்று இறக்கி விட்டு அவனே சார் என்னை என்கவுண்டரில் போடத்தானே கூட்டி வந்திருக்கிறீர்கள் என்று கேட்ட பின்பு....அவர்தான் மதுரை ஹீரோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X