மண் அது மண் அல்ல பொன் | Dinamalar

மண் அது மண் அல்ல பொன்

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | |
மண் அது மண் அல்ல பொன்விழிப்புணர்வு ஓவியம் தீட்டும் ஏழு வயது சிறுமிஉலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் மண்உதவுகின்றது. உழவா்களுக்கு வாழ்வளிக்கும் விளைநிலமாக . வீடு கட்ட, தொழிற்சாலை அமைக்க, விளையாட, மேய்ச்சல் நிலமாக, ஆறாக, ஏாியாக, ஓடையாக, ஊற்றாக இப்படி நம் ஒவ்வொருவர் வாழ்வின் ஜீவாதாரமாக மண் விளங்குகிறது.இறைவனின் மிக அாிய படைப்பு மண். உழவர்களைப்



latest tamil news



மண் அது மண் அல்ல பொன்விழிப்புணர்வு ஓவியம் தீட்டும் ஏழு வயது சிறுமி
உலகில் வாழும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் மண்உதவுகின்றது. உழவா்களுக்கு வாழ்வளிக்கும் விளைநிலமாக . வீடு கட்ட, தொழிற்சாலை அமைக்க, விளையாட, மேய்ச்சல் நிலமாக, ஆறாக, ஏாியாக, ஓடையாக, ஊற்றாக இப்படி நம் ஒவ்வொருவர் வாழ்வின் ஜீவாதாரமாக மண் விளங்குகிறது.


latest tamil news


இறைவனின் மிக அாிய படைப்பு மண். உழவர்களைப் பொறுத்தவரை அது மண் அல்ல பொன்.விவசாயத்தின் ஆணிவேரான மண், பயிர் வளா்வதற்குத் தேவையான ஊட்டச் சத்துக்களைச் சேமித்து வைக்கும் ஆதாரமாகவும், பயிா்களுக்கு தேவையான பாசன நீரைச் சேகாித்து வைத்துக்கொள்ளும் நீா்த் தேக்கமாகவும் பயன்படுகிறது.


latest tamil news


Advertisement

மண்ணின் மேல் பக்கத்தில், ஓா் அறிவு படைத்த தாவரங்களில் இருந்து ஆறு அறிவு படைத்த மனிதர்கள் வரை பலவகை உயிரினங்கள் வாழ்வதை நாம் காண்கிறோம். மண்ணின் மறுபக்கத்தில் முற்றிலும் மாறுபட்ட பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. இது கோடிக்கணக்கான வருடங்களாக மண்ணிற்கு மேல் உள்ள உயிரினங்களுக்கு எவ்வித பிரதிபலனும் பாராது உதவி வருகிறது.


latest tamil news


ஆனால் அப்படிப்பட்ட மண்ணிற்கு மனித கூட்டம் சமீபகாலமாக மாபெரும் துரோகம் செய்து வருகிறது.மக்காத கழிவுகளைப் போட்டும், ரசாயண உரங்களைக் கொட்டியும், நச்சு நீரை ஓடவிட்டும் இன்ன பிற செயல்களாலும் மண்ணை மலடாக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளது.


latest tamil news


மண்தானே என்று அதனை சாதாரணமாக நினைத்து அதனை வஞ்சித்தால் இன்னும் சில ஆண்டுகளில் வறட்சி, நில வெடிப்பு ,பஞ்சம் என்பது வந்துவிடும், ஆகவே மண் குறித்த விழிப்புணர்வு வேண்டும் என்பதற்காக ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கிவாசுதேவ் உலகம் முழுவதும் மண்ணைப்பாதுகாப்போம் என்ற முழக்கத்தை முன்வைத்து பயணம் மேற்கொண்டுள்ளார்.இந்த பயணம் அடுத்த மாதம் டில்லியிலும் பின் கோவையிலும் நிறைவு பெற உள்ளது.


latest tamil news


இவரது பயண முழக்கத்திற்கு ஆதரவாக சென்னை பழைக மகாபலிபுரம் ரோட்டில் உள்ள ஈகாட்டூர் பகுதியில் வசிக்கும் தென்றல் என்பவர் தன் ஏழு வயது மகளுடன் இணைந்து ஒவியத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.


latest tamil news


ஓவியம் வரையும் மகளை ஊக்கப்படுத்தி இதுவரை அந்தப்பகுதியில் இருபதிற்கும் மேற்பட்ட ஓவியங்களை வரைந்து வைத்துள்ளார்,இன்னும் வரைய உளளார்.ஓவியத்தையும் அதன் உள்கருத்திலும் மனதை பறிகொடுத்த மக்கள் தங்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றனர்.
-எல்.முருகராஜ்



புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X