வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு 6 ரூபாயும் மத்திய அரசு குறைத்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனால் பெட்ரோல் விலையில் லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலையில் 7 ரூபாயும் குறையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85, டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94க்கு விற்பனையாகிறது. கடந்த 45 நாட்களாக பெட்ரோல் டீசல் விலையில் மாற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்று(மே 21) மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கலால் வரியை குறைத்துள்ளது மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் என்பதில் ஐயமில்லை
சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம்
'சமையல் எரிவாயு சிலிண்டருக்கும் மானியம் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் வாங்குபவர்களுக்கு சிலிண்டருக்கு 200 வரை மானியம் கிடைக்கும். உஜ்வாலா யோஜானா திட்டத்தின் மூலம் 9 கோடி பேர் பயனடைவர். அரசுக்கு இதன் மூலம் ஆண்டுக்கு ரூ 6,100 கோடி கூடுதல் செலவாகும்' இவ்வாறு நிர்மலா சீதாராமன் மேலும் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE