ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா பயணம் அதிகரிப்பு

Updated : மே 22, 2022 | Added : மே 21, 2022 | |
Advertisement
சென்னை: கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் இருந்து ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வது, 30 சதவீதம் அதிகரித்துள்ளாக, ஐ.ஆர்.சி.டி.சி., எனும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, அந்த அதிகாரிகள் கூறியதாவது: குறைந்த கட்டணத்தில் குறுகிய துாரத்தில் இருக்கும் சுற்றுலா இடங்களை காணும்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

சென்னை: கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், சென்னையில் இருந்து ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்வது, 30 சதவீதம் அதிகரித்துள்ளாக, ஐ.ஆர்.சி.டி.சி., எனும் இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



latest tamil news



இது குறித்து, அந்த அதிகாரிகள் கூறியதாவது: குறைந்த கட்டணத்தில் குறுகிய துாரத்தில் இருக்கும் சுற்றுலா இடங்களை காணும் வகையில், 'ரயில் டூர் பேக்கேஜ்' என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம். கொரோனா பாதிப்பு குறைந்து, கோடை விடுமுறை துவங்கியுள்ள நிலையில், இந்த திட்டத்தின் வாயிலாக, சென்னையில் இருந்து சுற்றுலாவுக்கு செல்வது, 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதாவது, வழக்கமாக செல்லும் விரைவு ரயில்களில், குறிப்பிட்ட அளவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி.,க்கு டிக்கெட் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதன் வாயிலாக சுற்றுலா பயணியரை அழைத்து செல்கிறோம்.


latest tamil news


அதன்படி, சென்னையில் இருந்து ஊட்டி, கொடைக்கானல், மதுரை, கன்னியாகுமரி, ராமேஸ்வரம், மைசூரு - கூர்க் போன்ற சுற்றுலா தலங்களுக்கு அழைத்து செல்கிறோம்.ஒவ்வொரு வியாழக் கிழமையும் சென்னையில் இருந்து புறப்பட்டு, திங்கள் கிழமை சென்னை திரும்பும் வகையில், இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி அல்லது மூன்றாம் வகுப்பு 'ஏசி' பெட்டியில் பயணிக்கலாம்.

இதுகுறித்து மேலும் தகவல் பெற, 82879 32121, 82879 31972 என்ற மொபைல் போன் எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X