ரஷ்ய ராணுவத்திடம் வீழ்ந்தது உக்ரைனின் மரியுபோல் நகரம்

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
போக்ரோவ்ஸ்க் : உக்ரைனை சேர்ந்த மரியுபோல் நகரம் முழுமையாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று மாதங்களாக நடந்து வரும் போரில், முக்கியமான மரியுபோல் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.இது குறித்து, ரஷ்ய ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கோனான்ஷென்கோவ் கூறியதாவது:மரியுபோல்

போக்ரோவ்ஸ்க் : உக்ரைனை சேர்ந்த மரியுபோல் நகரம் முழுமையாக ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, பிப்., 24ல் ரஷ்யா போர் தொடுத்தது. மூன்று மாதங்களாக நடந்து வரும் போரில், முக்கியமான மரியுபோல் நகரை கைப்பற்றி விட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து, ரஷ்ய ராணுவ செய்தி தொடர்பாளர் இகோர் கோனான்ஷென்கோவ் கூறியதாவது:மரியுபோல் நகரை ரஷ்ய ராணுவம் கைப்பற்றி விட்டது. இது ரஷ்யாவின் மிகப் பெரிய வெற்றியாகும். மரியுபோல் நகரின் பிரமாண்ட 'அஜோவ்ஸ்டால் ஸ்டீல்' ஆலையில் உள்ள சுரங்கத்தில் உக்ரைன் ராணுவ வீரர்கள் பதுங்கியிருந்தனர்.

கடந்த இரண்டு நாட்களில், இங்கிருந்த 2,439 உக்ரைன் ராணுவத்தினர், ரஷ்யாவிடம் சரண் அடைந்துள்ளனர். ஒரு சிலர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். சிலர் தனி முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில், இதுவரை, 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த வெற்றி வாயிலாக ரஷ்ய ராணுவத்தினர் மாஸ்கோவில் இருந்து கிரீமியா வழியாக, மரியுபோல் நகரை சுலபமாக அடைந்து விடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21-மே-202222:00:52 IST Report Abuse
Ramesh Sargam போர் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகிவிட்டது. உக்ரைன் தன்னுடைய நகரங்களை வொவொன்றாக இழக்கிறது. போரை முடிவுக்கு கொண்டுவர ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் பிற நாடுகள் எந்தவித முயற்சியையும் எடுப்பதில்லை. இந்தியா தன்பங்குக்குக்கு, இரு நாடுகளையும் பகைத்துக்கொள்ள விரும்பாமல் ஒப்புக்கு இரு நாடுகளும் போரை பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டுவர விழைகிறது. அமெரிக்கா - உக்ரைன் நாட்டை உசுபேத்தி, உக்ரைன் நாட்டுக்கு மேலும் மேலும் நிதி கடனாக அளித்து, உக்ரைன் வொவொரு நகரங்களை இழப்பதையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. ரஷ்யா, உக்ரைன் நாட்டை முற்றிலும் தன்வசப்படுத்தாமல் ஓயாது போல இருக்கிறது. முடிவு எப்படி இருக்குமோ?
Rate this:
Cancel
premprakash - vellore,இந்தியா
21-மே-202221:46:04 IST Report Abuse
premprakash Congrats to Russian army....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X