100 நாள் வேலை திட்டத்தில் சம்பள உயர்வு தர வலியுறுத்தல்

Added : மே 21, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
நாகர்கோவில் : ''100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை 100 ரூபாய் அதிகரித்து வழங்க வேண்டும்,'' என, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் விஜயராகவன் கூறினார்.நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. ஆனால் பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கி வருவதால் கோடிக்கணக்கில்


நாகர்கோவில் : ''100 நாள் வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை 100 ரூபாய் அதிகரித்து வழங்க வேண்டும்,'' என, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் விஜயராகவன் கூறினார்.

நாகர்கோவிலில் அவர் கூறியதாவது:விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய அரசு தவறிவிட்டது. ஆனால் பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சலுகைகள் வழங்கி வருவதால் கோடிக்கணக்கில் அரசுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மண்ணெண்ணை கிடைக்காமல் மீனவர்கள் சிரமப்படுகின்றனர்.

பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டு வருகிறது. 100 நாள்வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு சம்பளத்தை 100 ரூபாய் அதிகரித்து வழங்க வேண்டும். மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து ஆக. 1 ல் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாடு முழுவதும் 500 இடங்களில் போராட்டம் நடைபெறும், என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jayvee - chennai,இந்தியா
22-மே-202219:04:18 IST Report Abuse
jayvee வேலையே செய்யாமல் எழுபத்திஐந்து சதவீதம் கூலியை பெற்றுக்கொண்டு (மீதம் கமிஷன்) வரும் நிலையில் கூலி உயர்வு வேண்டுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X