வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை-பிரதமர் நரேந்திர மோடி, வரும் 26ம் தேதி சென்னை வருகிறார். அதையொட்டி பிரதமரின் சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், நேற்று சென்னையில் ஆய்வு செய்தனர்
![]()
|
.தமிழகத்தில், பல்வேறு சாலை திட்டங்கள் மற்றும் ரயில்வே திட்டங்களை துவக்கி வைப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, சென்னை வருகிறார். வரும் ௨௬ம் தேதி மாலை ஹைதராபாதில் இருந்து, தனி விமானத்தில் புறப்பட்டு, மாலை 5:30 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வருகிறார். அவருக்கு பா.ஜ., சார்பில் உற்சாகவரவேற்பு அளிக்கப்படுகிறது.
அங்கிருந்து ஹெலிகாப்டரில், ஐ.என்.எஸ்., அடையாறு செல்கிறார். அங்கிருந்து, காரில் விழா நடக்கும், நேரு விளையாட்டு அரங்கத்திற்கு செல்கிறார். விழா முடிந்ததும், காரில் ஐ.என்.எஸ்., அடையாறு வருகிறார். அங்கிருந்து இந்திய விமானப் படை ஹெலிகாப்டரில், இரவு 7:40 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் செல்கிறார். விமானப் படை விமானத்தில் டில்லி செல்கிறார்.
![]()
|
பிரதமரின் பயணம் தொடர்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, சிறப்பு பாதுகாப்புப் படை அதிகாரிகள், நேற்று மாலை சென்னை வந்தனர். சென்னை பழைய விமான நிலையத்தை ஆய்வு செய்தனர்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement