ரூ.77 ஆயிரம் கோடி நன்கொடை தேவை!

Updated : மே 22, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (6) | |
Advertisement
இலங்கை வடகிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருந்த வரதராஜ பெருமாள்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மாற்றத்தை விரும்புவோரின் எதிர்பார்ப்புகள் இவை தான்...ராஜபக் ஷேக்கள் எவரும் இடம் பெறாத, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை, உடனடியாக அமைக்க வேண்டும் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க, அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்
ரூ.77 ஆயிரம் கோடி   நன்கொடை தேவை!


இலங்கை வடகிழக்கு மாகாணத்தின் முதல்வராக இருந்த வரதராஜ பெருமாள்: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கையில், மாற்றத்தை விரும்புவோரின் எதிர்பார்ப்புகள் இவை தான்...

ராஜபக் ஷேக்கள் எவரும் இடம் பெறாத, அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால அரசை, உடனடியாக அமைக்க வேண்டும்

ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க, அரசியல் சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும்

விரைவில், பார்லிமென்ட் தேர்தல், மாகாணங்களுக்கான தேர்தல், உள்ளாட்சி தேர்தல் போன்றவற்றை ஒரேயடியாகவோ, பல கட்டங்களாகவோ நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக் கப்படுவோர் பதவியில் அமர வேண்டும்

அனைத்து கட்சிகளும் இணையாவிட்டாலும், ஒரு இடைக்கால அல்லது காபந்து அரசு அமைப்பது சாத்தியமே. ஆனால், மற்ற விஷயங்கள் அவ்வளவு சுலபமானவை அல்ல

ராஜபக் ஷேக்களுக்கு, பார்லிமென்டில் கிட்டத்தட்ட, 100 பேர் ஆதரவு இருக்கிறது. எனவே, அவர்கள் விரும்பாமல், அரசியல் சட்டத்திருத்தம் சாத்தியமில்லை  இலங்கையில் தற்போது, பெட்ரோல், டீசல், எரிவாயு, உணவுப் பொருட்கள் தட்டுப்பாடு பிரச்னைகள் மட்டும் இல்லை... வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்கள் விலை பல மடங்கு உயர்வு, அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் சம்பளம் குறைவாக உள்ளது,

உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்ய தேவையான அன்னிய செலவாணி இல்லை என, பல பிரச்னைகள் உள்ளன வெளிநாட்டு கடன்களை திருப்பிச் செலுத்துவதை, இலங்கை அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறது. இதை எவ்வளவு காலத்துக்கு தொடர முடியும்? அதேநேரத்தில், தொடர்ந்து வெளிநாடு களிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறது

உள்நாட்டு நிதி நிறுவனங்களிடம் வாங்கிய கடன்களை திருப்பிச் செலுத்தினால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் தர, அரசிடம் பணம் இருக்காது. உள்நாட்டு நிறுவனங்களின் கடனை திருப்பிச் செலுத்தவில்லை எனில், அவை திவாலாகி விடும். ஆக, இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதுடன், இலங்கை அரசின் தற்போதைய பொருளாதார நெருக்கடி தீர, குறைந்தது, 1,000 கோடி டாலர், அதாவது, ௭௭ ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு, சர்வதேச நாணயங்களையோ, பொருட்களையோ, வெளிநாடுகளும், சர்வதேச நிறுவனங்களும் நன்கொடையாக வழங்க வேண்டும்.

இலங்கையின் பொருளாதாரம் அவிழ்க்க முடியாத, பெரும் சிக்கலுக்குள் அகப்பட்டிருக்கிறது. இப்போது ராஜ பக் சேக்களை வீட்டுக்கு போங்கள் என்பது, அடுத்து ஆட்சி அமைப்பவர்களுக்கு எதிராக திரும்பவும் வாய்ப்புகள் உள்ளன.


Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilan - NA,இந்தியா
22-மே-202218:54:31 IST Report Abuse
Tamilan உக்ரைனுக்கு அமேரிக்கா மட்டும் 100 பில்லியன் டாலர் கொடுக்கிறது . இது 7 லச்சம் கோடிகள் ரூபாய் . மற்ற நாடுகள் கொடுத்தது கொட்டியது மேலும் 100 பில்லியன் டாலரருக்கு மேல் இருக்கும் . இதில் கொஞ்சத்தை லங்கைக்கு கொடுக்க முடியும் . ஆனால் அதனால் என்ன பயன் என்று அந்த நாடுகள் யோசிக்கும் . முன்னர் zelansky போன்ற பலரை ஆக்கிரமித்திருந்த அமேரிக்கா நேட்டோ நாடுகள், இப்போது ஒட்டுமொத்த உக்ரனையும் ஆக்கிரமித்துவைத்தது . Zelensky இப்போது இவர்களின் தலையாட்டி பொம்மை. இந்த மாதிரியெல்லாம் அந்நாடுகளால் இலங்கையில் முடியவில்லை . அதற்க்கு முக்கிய காரணம் இந்தியாவுடனான இலங்கையின் உறவுதான் காரணம் .
Rate this:
Cancel
22-மே-202216:44:42 IST Report Abuse
கூரமுதலீ மனமிருந்தால் மார்க்கமுண்டு. சுற்றுலாவையே நம்பி இருப்பதை விட்டுவிட்டு உழைக்க பாருங்கள். வாழ்க வளமுடன்.
Rate this:
Cancel
Mohan - COIMBATORE,இந்தியா
22-மே-202213:43:25 IST Report Abuse
Mohan போக வேண்டியது தான
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X