சென்னை : தமிழகத்தில் பிளஸ் 2 பொது தேர்வு நாளை முடிகிறது.கொரோனா ஊரடங்கால், கடந்த ஆண்டு பொது தேர்வு நடத்த முடியாமல், அனைத்து மாணவர்களும் 'ஆல் பாஸ்' செய்யப்பட்டனர். இந்த ஆண்டு திட்டமிட்டபடி, 5ம் தேதி பிளஸ் ௨ தேர்வு துவங்கியது.தமிழகம், புதுச்சேரியைச் சேர்ந்த, 7,534 பள்ளிகளைச் சேர்ந்த, 4.50 லட்சம் மாணவியர் மற்றும் இரண்டு மூன்றாம் பாலினத்தவர் உட்பட, 8.85 லட்சம் பேர் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

அவர்களில், 32 ஆயிரம் பேர் பங்கேற்கவில்லை. இந்நிலையில், பிளஸ் 2வில் கணிதம், கணினி அறிவியல், பொருளியல் பிரிவு மாணவர்களுக்கு, முக்கிய பாடத் தேர்வுகள் நேற்று முன்தினம் முடிந்து விட்டன. அறிவியல், வரலாறு, வணிக கணிதம் மற்றும் தொழிற்கல்வி பாடப்பிரிவு மாணவர்களுக்கான தேர்வுகள் நாளை முடிகின்றன.உயிரியல், அறிவியல், வணிக கணிதம், தொழிற்கல்வி பிரிவு பாடங்களுக்கு, நாளை இறுதி தேர்வுகள் நடக்கின்றன.

இதனுடன் அனைத்து தேர்வுகளும் முடிகின்றன.இதையடுத்து, கூடுதல் பாடமாக தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மட்டும், 28ம் தேதி தொழிற்கல்வி பாடத் தேர்வு நடக்கிறது.இதை தொடர்ந்து, ஜூன் 1 முதல் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் துவங்க உள்ளன.ஜூன் 23ல் தேர்வு முடிவுகளை வெளியிட, பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE