சீனாவில் கொரோனா பரவல்; தனிமை முகாமில் 13,000 பேர்

Updated : மே 21, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
பீஜிங் : சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா பாதிப்புக்குள்ளான ௧௩ ஆயிரத்துக்கும் அதிகமானோர், தனிமை முகாம்களில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. வர்த்தக தலைநகரான ஷாங்காயில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, தற்போது தலைநகர் பீஜிங்கில் வேகமாக பரவி வருகிறது.இதையடுத்து பீஜிங்கில் கடும் கட்டுப்பாடுகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பீஜிங் : சீன தலைநகர் பீஜிங்கில் கொரோனா பாதிப்புக்குள்ளான ௧௩ ஆயிரத்துக்கும் அதிகமானோர், தனிமை முகாம்களில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.நம் அண்டை நாடான சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. வர்த்தக தலைநகரான ஷாங்காயில் பரவத் துவங்கிய கொரோனா தொற்று, தற்போது தலைநகர் பீஜிங்கில் வேகமாக பரவி வருகிறது.



latest tamil news



இதையடுத்து பீஜிங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நகரின் பிரபல சந்தை, மெட்ரோ ரயில் பணி நடைபெறும் இடம், பஸ் நிலையம், சரக்கு போக்குவரத்து நிறுவனம் ஆகியவற்றில் பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், அந்த இடங்கள் மூடப்பட்டன.பீஜிங்கில் உள்ள 16 மாவட்டங்களில் 12 மாவட்டத்தில் தினமும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.கொரோனா பரவலை தடுக்க, தற்காலிக தனிமை முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.


latest tamil news



கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட ௧௩ ஆயிரத்துக்கும் அதிகமானோர், இந்த தனிமை முகாம்களில் வலுக்கட்டாயமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அடுக்குமாடி குடியிருப்புகளிலும் கொரோனா பரவியுள்ளதால், ௧௩ லட்சத்துக்கும் அதிகமானோர், வீடுகளுக்குள் முடங்கிஉள்ளனர். தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்ல, மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
22-மே-202211:22:20 IST Report Abuse
ஆரூர் ரங் இதைப் பார்த்து கூட பல நன்றி கெட்ட🤔 ஜென்மங்கள் இலவச தடுப்பூசி மூலம் நாட்டைக் காப்பாற்றிய ஆட்சியைப் பற்றி மட்டமாக பேசுகின்றனர். நரகம் நிச்சயம்.
Rate this:
Cancel
Fastrack - Redmond,யூ.எஸ்.ஏ
22-மே-202200:56:31 IST Report Abuse
Fastrack அமெரிக்காவிலும் இந்த நிலைமை தான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X