காங்., ராகுல் போக்கு குறித்து கூட்டணி சிவசேனா சாடல்; காங்., கவலைக்கிடம் என கருத்து| Dinamalar

காங்., ராகுல் போக்கு குறித்து கூட்டணி சிவசேனா சாடல்; காங்., கவலைக்கிடம் என கருத்து

Updated : மே 23, 2022 | Added : மே 21, 2022 | கருத்துகள் (10) | |
மும்பை-'ராகுல் தன் கட்சியின் தலைமை உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் உள்ளார்' என, காங்கிரஸ்முன்னாள் தலைவரை, கூட்டணி கட்சியான சிவசேனா சாடியுள்ளது. காங்கிரஸ் மிகவும் கவலைக்கிடமாகஉள்ளதாகவும் பகிரங்கமாக கூறியுள்ளது. இதனால், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையுமா என்பதுடன், மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசு தாக்கு பிடிக்குமா என்ற கேள்வியும்
காங்., ராகுல், கூட்டணி, சிவசேனா, சாடல், கவலைக்கிடம், என்று, கருத்து

மும்பை-'ராகுல் தன் கட்சியின் தலைமை உட்பட பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் உள்ளார்' என, காங்கிரஸ்முன்னாள் தலைவரை, கூட்டணி கட்சியான சிவசேனா சாடியுள்ளது.

காங்கிரஸ் மிகவும் கவலைக்கிடமாகஉள்ளதாகவும் பகிரங்கமாக கூறியுள்ளது. இதனால், தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமையுமா என்பதுடன், மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசு தாக்கு பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக, காங்கிரஸ் சமீபத்தில் சிந்தனையாளர் கூட்டத்தை நடத்தியது. ராஜஸ்தானின் உதய்பூரில் நடந்த இக்கூட்டத்தில், 430க்கும் மேற்பட்ட மூத்த தலைவர்கள் பங்கேற்றனர். ஆனாலும், கட்சித் தலைமை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படவில்லை.

இக்கூட்டத்தில், 'பிராந்திய கட்சிகளுக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. பா.ஜ.,வுக்கு எதிராக அவர்களால் கடும் போட்டியை தர முடியாது. காங்கிரஸ் தலைமையில் மட்டுமே அது சாத்தியம்' என, ராகுல் பேசியது சர்ச்சையைஏற்படுத்தியது.

அவருடைய பேச்சுக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் சீதாராம் யெச்சூரி, ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட பல தலைவர்கள் வெளிப்படையாக விமர்சித்தனர்.

மோசமான நிலை

இந்நிலையில், முதல்வர்உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ள மஹாராஷ்டிராவில் இருந்து வெளியாகும் சிவசேனா பத்திரிகையான, 'சாம்னா'வில் நேற்று வெளியான கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:ஒரு பக்கம், 2024 லோக்சபா தேர்தலுக்கு பா.ஜ., தயாராகி வருகிறது.

அதே நேரத்தில் காங்கிரஸ் மிகவும் மோசமான கட்டத்தில் உள்ளது. உதய்பூரில் நடந்த கூட்டத்தில், கட்சித் தலைமை உட்பட பல பிரச்னைகளுக்கு ராகுல் தீர்வு காணவில்லை. அதனால் தான், பல மாநிலங்களில் அக்கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பலர் விலகி வருகின்றனர். பீஹார்,உத்தர பிரதேசத்தில் மாநிலத் தலைவர்களே இல்லை.சுனில் ஜாக்கர், ஹர்திக் படேல், ஜோதிராதித்ய சிந்தியா, ஜிதின் பிரசாதா போன்ற வலுவான தலைவர்கள் வெளியேறியுள்ளது, காங்கிரஸ் தலைமையின் தோல்வியையே காட்டுகிறது.

மக்களிடையே பிரபலமாக உள்ள தலைவர்களை, கட்சி இழந்திருக்கக் கூடாது.தற்போது காங்கிரஸ் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இது, நம் நாட்டின் ஜனநாயகத்துக்கு நல்லதல்ல.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.சித்தாந்தம்ஆனால், இதை காங்கிரஸ் மறுத்துள்ளது.

''காங்கிரஸ் என்பது ஒரு சித்தாந்தம். பலர் வருவர்; பலர் வெளியேறுவர். யார் வெளியேறுகின்றனர் என்பது குறித்து கவலைப்படாமல், நாடு சந்தித்து வரும் பிரச்னைகளை கவனிப்போம்,'' என, கட்சியின் மஹாராஷ்டிரா மாநிலத் தலைவர் நானா படோல் கூறியுள்ளார்.

''எங்களுக்கு யாருடைய ஆலோசனையும் தேவையில்லை,'' என, காங்கிரசின் மும்பை தலைவர் பாய் ஜகதீப் கூறியுள்ளார்.கூட்டணி கட்சிகளான காங்கிரஸ் - சிவசேனா இடையே ஏற்பட்டுள்ள இந்த கருத்து மோதலால், லோக்சபா தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இணைந்த வலுவான கூட்டணி ஏற்படுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.அதோடு, மஹாராஷ்டிராவில் கூட்டணி அரசு தொடர்ந்து தாக்கு பிடிக்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

பா.ஜ., விளாசல்

ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டன் நகருக்கு சென்றுள்ளார் ராகுல். அங்கு நடந்த ஒரு நிகழ்ச்சியில், 'பா.ஜ., மத ரீதியில் நாடு முழுதும் மண்ணெண்ணெய் ஊற்றி வருகிறது. இதில் சிறு நெருப்பு பொறி பட்டாலும், மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்' என கூறியிருந்தார்.இது குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர் கவுரவ் பாட்டியா கூறியதாவது:பிரதமர் மோடி மீது ராகுல் தொடர்ந்து வெறுப்பை கக்கி வருகிறார். வெளிநாடுகளுக்கு செல்லும்போதெல்லாம், மோடிக்கு எதிராக பேசுவதாக கருதி, நம் நாட்டுக்கு எதிராக பேசி வருகிறார். இது, நாட்டுமக்களை இழிவுபடுத்துவதாகும்.கடந்த 1984ல் சீக்கியருக்கு எதிரான வன்முறையை கட்டவிழ்த்து, நாட்டில் மண்ணெண்ணெய் ஊற்றியது காங்கிரசின் வேலை. மிக மோசமான நிலையில் உள்ள காங்கிரசின் பொறுப்பில்லாத, தோல்விகளையே சந்தித்து வரும் முன்னாள் தலைவர், பல்வேறு நாடுகளில், நம் நாட்டுக்கு எதிராக தொடர்ந்து பேசி வருகிறார்.எதிர்க்கட்சியாக இருப்பதால், இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசலாமா?இவ்வாறு அவர் கூறினார்.

ராகுல் 'அந்தர்பல்டி!'

காங்கிரஸ் சிந்தனையாளர் கூட்டத்தில், ராகுல் மாநில கட்சிகளை கடுமையான விமர்சித்து சர்ச்சையில் சிக்கினார். அவருக்கு எதிராக பல மாநில கட்சிகள் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில், லண்டனில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் பேசியதாவது:பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணியில், பெரியண்ணனாக இருக்க காங்கிரஸ் விரும்பவில்லை. உதய்பூரில் நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் சித்தாந்த போர் நடக்கிறது. கூட்டணி கட்சியான தி.மு.க.,வுக்கு தமிழகம் சார்ந்த சில கொள்கைகள் உள்ளன.ஆனால், தேசிய அளவிலான கொள்கை உள்ள கட்சி காங்கிரஸ் மட்டுமே என்று தான் குறிப்பிட்டேன்.எதிர்க்கட்சிகளில் உள்ள நாம் அனைவரும் ஒருங்கிணைந்து, நட்பாக செயல்பட வேண்டும். இது, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சி அல்ல. நாட்டை மீட்பதற்கான முயற்சி.இவ்வாறு அவர் பேசினார்.புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X