சிறையில் சாப்பிடாமல் தவிக்கும் சித்து

Updated : மே 22, 2022 | Added : மே 22, 2022 | கருத்துகள் (23) | |
Advertisement
பாட்டியாலா-சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்., பிரமுகர் நவ்ஜோத் சிங் சித்து, உண்ணாமல், உறங்காமல் தவித்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்., முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 1988ல் தெரு சண்டையில், குர்னாம் சிங் என்பவரை முகத்தில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

பாட்டியாலா-சிறையில் அடைக்கப்பட்டுள்ள காங்., பிரமுகர் நவ்ஜோத் சிங் சித்து, உண்ணாமல், உறங்காமல் தவித்ததாக தகவல் வெளியாகிஉள்ளது.பஞ்சாபில், முதல்வர் பகவந்த் மான் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.



latest tamil news



இம்மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் காங்., முன்னாள் தலைவருமான நவ்ஜோத் சிங் சித்து, 1988ல் தெரு சண்டையில், குர்னாம் சிங் என்பவரை முகத்தில் குத்தியதில் அவர் உயிரிழந்தார்.

இந்த வழக்கில், சில ஆண்டுகளுக்கு முன், நவ்ஜோத் சித்து 1,000 ரூபாய் அபராதத்துடன் விடுதலை செய்யப்பட்டார்.இந்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி குர்னாம் சிங் குடும்பத்தார் அளித்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நவ்ஜோத் சித்துவுக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் நவ்ஜோத் சித்து பாட்டியாலா மத்திய சிறைச்சாலையில், 10ம் எண் சிறையில் அடைக்கப்பட்டார்.இது குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:முதல் நாள் இரவு சிறையில் தந்த உணவை சாப்பிட சித்து மறுத்து விட்டார். வீட்டில் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார். இரவு முழுதும் அவர் துாக்கமின்றி தவித்தார்.


latest tamil news



சிறையில் அவருடன் நான்கு கைதிகள் உள்ளனர். அவர் பெயர், பாட்டியாலா சிறையில், ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 683வது கைதியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடுங்காவல் என்பதால் சிறைக் கைதிகளுக்கான அனைத்து வேலைகளையும் சித்து செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபை தேர்தலில், நவ்ஜோத் சித்துவை எதிர்த்து போட்டியிட்ட அகாலி தள தலைவர் பிக்ரம் சிங் மஜிதியாவும், போதை பொருள் வழக்கில் கைதாகி பாட்டியாலா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர் ஜீவன் ஜோத் கவுரிடம் தோல்வி அடைந்த இருவரும், தற்போது ஒரே சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
22-மே-202216:18:02 IST Report Abuse
Vena Suna சித்து பாவம். கோபத்தில் ஒருவரை குத்த, போய் அவர் இறக்க கொலை பழி... அருமையான கிரிக்கெட் வீரர். அருமையான வருணையாளர். அரசியலில் சரி இல்லை. இந்த நிலை கொடுமை.
Rate this:
Cancel
22-மே-202215:29:08 IST Report Abuse
வீரா பிஜேபியில் இருந்த போது சித்து மற்றும் அவரின் மனைவி இருவருக்குமே முறையே MP MLA பதவிகள் கொடுத்து இருந்தனர். அருண் ஜெட்லீ மாதிரி படித்த தலைவருக்கு தன் தொகுதியை விட்டுத்தர மனமில்லாமல் முறைத்து கொண்டு உள்ளடி வேலைகளை மூலம் அருண் ஜெட்லீயை தோற்க வைத்து பின் கட்சியை விட்டு வெளியேறினார். இத்தனைக்கும் இவருக்கு ராஜ்யசபை உறுப்பினர் பைசா செலவில்லாமல் கிடைத்து இருக்கும். பேராசை. காங்கிரஸில் நுழைந்து நல்ல இருந்த முதல்வர் அம்ரிந்தரை, கட்சியை ஆட்சியை என்று வரிசையாக ஒழித்து கட்டினார். இவரது மனைவி ரயில்வே லைனுக்கு அருகில் காங்கிரஸ் கட்சியின் மீட்டிங் போட்டு 50 க்கும் மேற்பட்டோரை கொன்றார். பற்றா குறைக்கு பாகிஸ்தானிகளுடன் சேர்ந்து கொண்டு இந்தியாவுக்கு எதிரான பேச்சுகள் வேறு. சென்னையில் ருசியான உணவில்லை ஆனால் பாகிஸ்தான் உணவு சொர்கம் உணவு விஷயத்தில் பாக்கிஸ்தானை பாராட்டுவதில் தவறில்லை ஆனால் தமிழ்நாட்டை ஏன் குறை சொல்லவேண்டும். ஒரு வருட தண்டனை இவனுக்கு போதவே போதாது.
Rate this:
Cancel
22-மே-202215:02:59 IST Report Abuse
ஆரூர் ரங் கட்டிங் போடாம சோறு இறங்காது😛. என்ன செய்ய?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X