அதிகரிக்கும் ஆழ்கடல் வெப்பநிலை
மனிதர்களால் ஏற்படும் வெப்பநிலை அளவில் 90 சதவீதத்தை கடல்நீர் உறிஞ்சுகிறது. இது ஆழ்கடலில் சென்று சேர்கிறது. இந்நிலையில் கடல்நீர்மட்ட மேற்பரப்பில் இருந்து 2300 அடி ஆழத்தில் உள்ள ஆழ்கடல் நீரின் வெப்பநிலை அடுத்த 50 ஆண்டுகளில் 0.36 டிகிரி பாரன்ஹீட் (0.2 டிகிரி செல்சியஸ்) உயரும் என பிரிட்டனின் எக்ஸ்டர் பல்கலை ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆழ்கடல் வெப்பநிலை தொடர்ந்து உயர்வது எதிர்காலத்தில் கடல்நீர்மட்டம் உயர்வுக்கும், கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதற்கும் வழிவகுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
தகவல் சுரங்கம்
பல்லுயிர் பாதுகாப்பு தினம்
ஒவ்வொரு உயிரினத்துக்கும் தனி வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒன்று மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான் பூமியில் சமநிலை ஏற்படும். நாம் உணவு, மருத்துவம் உள்ளிட்ட தேவைக்கு பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம். பல்லுயிர்களுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி ஆண்டுதோறும் ஐ.நா. சார்பில் மே 22ல் சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. நீர், நிலத்தில் வாழும் உயிரின வகைகளின் தொகுப்பு பல்லுயிர் பரவல் எனப்படுகிறது. 'அனைத்து உயிர்களுக்கும் பகிரப்பட்ட எதிர்காலத்தை உருவாக்குதல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.